ரூ.10000 உறுதியாக கிடைக்கும்! ஒருங்கிணைந்த பென்ஷன் என்றால் என்ன? இனி யாருக்கு எவ்வளவு பென்ஷன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்திற்கு வழி ஏற்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

jobs job old pension scheme pension

பழசு புதுசு வேறுபாடு: தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.

அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும்.

'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும்’ 'தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும்’ உள்ள வித்தியாசம்:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.

: தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். ஏப்ரல் 1, 2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு NPS பொருந்தும்.

அதுவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறிப்பாக குறைந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கு, அடிப்படை நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறைந்தபட்சம் ₹10,000 மாத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+