Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம்ம.. சம்பளம் டபுள் ஆகுதா.. Fitment Factor ஆல் எல்லாமே மாறும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்படும் என்று அறிவித்த மத்திய அரசு, குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இன்னும் நியமிக்கவில்லை. இந்த குழு தான் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய அமைப்பை மாற்றி அமைக்க போகிறது. அதுபற்றி விவாதங்கள் அதிகமாகி வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசின் 8வது ஊதியக் குழு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) என்ற பார்முலாவின் படி தான் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும். அது பற்றி பார்ப்போம்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தீர்மானிப்பதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பொருத்தமான காரணிதான் முக்கியமான முக்கியப் பங்கு வகிக்கிறது. சரி, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன.. ஒரு அரசு ஊழியரின் அடிப்படை ஊதியத்துடன் (Basic Pay) பெருக்கப்படும் ஓர் எண்ணாகும். இது திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் கணக்கிட உதவும். இதன் அடிப்படை பார்முலா எளிமையானது.

salary central government employees

திருத்தப்பட்ட சம்பளம்=அடிப்படை ஊதியம்× ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த பார்முலாவின் படி ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மேலும், அரசு ஊழியர்களுக்கு ஏற்ற ஊதியத்தை மதிப்பிடுவதற்கு டாக்டர் வாலஸ் ஆய்க்ராய்டு உருவாக்கிய ஆய்க்ராய்டு ஃபார்முலாவையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த ஆய்க்ராய்டு பார்முலா என்பது, உணவு, உடை மற்றும் வீட்டுவசதி போன்ற அத்தியாவசியத் தேவைகள் உட்படக் குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் ஊதியத்தை மதிப்பிடுகிறதாம். இது சராசரி ஊழியர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதாக இருக்குமாம்

7வது ஊதியக் குழுவின் தற்போதைய ஊதியம்

7வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹18,000 ஆக இருக்கிறது. அதேசமயம் ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ₹9,000 ஆக இருக்கிறது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர்மட்டப் பதவிகளுக்கான அதிகபட்ச சம்பளம் தற்போது ₹2,50,000 ஆக உள்ளது.

அண்மையில், மத்திய அமைச்சரவை அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3% உயர்த்த ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அவை 58% ஆக அதிகரித்துள்ளன. இந்த உயர்வினால், குறைந்தபட்ச சம்பளம் ₹28,000-லிருந்து ₹28,440 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹13,950-லிருந்து ₹14,220 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

8வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் சம்பளம் எவ்வளவு

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.08 வரை நிர்ணயிக்கப்படலாம் என்று முதற்கட்ட விவாதங்கள் தெரிவிக்கின்றன. இது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். அந்த இரண்டு விஷயங்கள் படியும் ஊதியம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக இருந்தால்:

  • ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ₹34,560 ஆக உயரக்கூடும்.
  • ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ₹17,280 ஆக உயரக்கூடும்.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.08 ஆக இருந்தால்:

  • ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ₹37,440 ஆக உயரக்கூடும்.
  • ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ₹18,720 ஆக உயரவும் வாய்ப்பு உள்ளது.

முக்கியமான விஷயம்

8வது ஊதியக் குழு தொடர்பாக மத்திய அரசு ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டது, ஆனால் குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்து அதன் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமித்த பிறகுதான் எவ்வளவு சம்பளம் உயரும் எனபதும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எத்தனை சதவீதம் என்பதும் தெரியவரும். எனினும் இந்த புதிய ஊதிய உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+