இந்திய போர்க் கைதியை மோசமாக நடத்தும் பாகிஸ்தான்! ஜெனிவா உடன்படிக்கை சொல்வது என்ன தெரியுமா?
Recommended Video

டெல்லி: இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ளது உறுதியாகியுள்ள, நிலையில் ஜெனிவா ஒப்பந்தம் அடிபப்படையில், அவரை கவுரவமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் சிக்கிய இந்திய விமானி என்ற பெயரில் ஒரு வீடியோவை பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்த விமானி முகத்தில் ரத்தக் காயங்கள் இருப்பது போன்ற வீடியோவை பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்திய விமானியை சிலர் அடித்து, உதைப்பது போலவும் அதில் காட்சிகள் உள்ளன.

இவ்வாறு போர்க்கைதியை கண்ணியக்குறைவாக நடத்தக்கூடாது என்று கூறுவதுதான் ஜெனீவா உடன்படிக்கையின் முக்கிய அம்சம்.
ஜெனீவா உடன்படிக்கை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வேகமாக கருத்துக்கள் பரவி வரும் இந்த சூழ்நிலையில்,
ஜெனிவா உடன்படிக்கை என்றால் என்ன என்பது குறித்த ஒரு விவரம் இதோ:
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, 1949ஆம் ஆண்டு ஜெனிவா உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. காயமடைந்த வீரருக்கு அவரது நாடு, இனம், நிறம், பாலினம், மதம் போன்ற எந்த ஒரு வேறுபாடும் பார்க்காமல் உடனடியாக தக்க சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பிடிபட்ட ராணுவ வீரர் எந்த ஒரு சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்ட கூடாது.
உடல் உறுப்புகளை வெட்டி அகற்றுதல் கூடாது. பிடிபட்ட வீரரை கொடுமை செய்தல் கூடாது. வீரரின் தன் மானத்தை பாதிக்கும் செயல்களில் எதிரி நாட்டு வீரர்கள் ஈடுபடக்கூடாது.
முறைப்படி நிறுவப்படாத நீதிமன்றங்கள், மூலமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட கூடாது . போர்க் கைதியின், அடையாளத்தை உறுதிப்படுத்தி அவரின் சொந்த நாட்டுக்கு அதை முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
போர்க்கைதிகள் தங்களது பெயர் , ரேங்க் மற்றும் சீரியல் நம்பர் ஆகியவற்றை மட்டுமே தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு மேல் அவரிடம் தொந்தரவு செய்ய கூடாது. இவ்வாறு ஜெனிவா உடன்படிக்கை தெளிவாக கூறுகிறது.
ஆனால், பாகிஸ்தான் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த உடன்படிக்கை அம்சங்கள் அனைத்துமே மீறப்பட்டுள்ளன. வீரரின் கண்ணியம் காக்கப்படவில்லை. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications