பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டா பிரபலங்களுக்கு கடிவாளம் போட்ட மத்திய அரசு.. அதிரடி அறிவிப்பு
பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பிரபலங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
டெல்லி: பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்லாயிரம் பாலோயர்களை கொண்ட பிரபலங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
அதன் படி, சமூக வலைத்தளங்களில் ஒரு பொருளையோ அல்லது சேவையோ பிரபலங்கள் ஆதரித்து பேசும் போது பார்வையாளர்கள் தவறாக வழி நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை கடைபிடிப்பதை உறுதி செய்ய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூபில் பிரபலமாக உள்ளவர்கள் விளம்பரத்தை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட் தொடங்கி, அழகு சாதன பொருட்கள் வரை பலவற்றுக்கு விளம்பரங்களில் நடித்து அதனை வாங்குமாறு சமூக வலைதள பிரபலங்கள் பதிவிடுகிறார்கள்.

பணம்
அவர்கள் சொல்வதை உண்மை என்று நம்பி வாங்கி அவரை பின்பற்றுபவர்கள் ஏமாந்துபோவதும் நடக்கிறது. ஏனெனில் அந்த பொருளை விளம்பரம் என்று சொல்லாமல் அதை செய்து வந்தார்கள். அதனால் தான் இந்த சிக்கல் இருந்தது. அதேபோல் பயன்படுத்தாத பொருளை பயன்படுத்தியதாக கூறி விளம்பரம் செய்து பணம் சம்பாதிப்பதும் நடக்கிறது.

புகார்கள் வந்தது
அந்த பொருளால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் விளம்பரம் செய்வதால் அவரை பின்பற்றுபவர்கள் தவறாக வழிகாட்டுதலுக்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து புகார்கள் அதிக அளவு வந்தது. இதையடுத்தே பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்லாயிரம் பாலோயர்களை கொண்ட பிரபலங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

அங்கீகரிக்கக்கூடாது
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத அல்லது அனுபவிக்காத எந்த ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அங்கீகரிக்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் ஏதேனும் பொருட்களை ஆதரித்து பேசும் போது, அதற்கான ஒப்புதலை தெளிவான மற்றும் புரியும் மொழியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

விளம்பரங்கள்
தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத அல்லது அனுபவிக்காத அங்கீகரிக்கக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய அரசு, பணம் செலுத்தியோ அல்லது ஸ்பான்சர் செய்துள்ளார்கள் என்றோ குறிப்பிட வேண்டும். அதாவது அந்த வீடியோவையோ அல்லது புகைப்படத்தையோ காட்டும் போது அதன் தலைப்பிலேயே முற்றிலும் இது விளம்பரம் என்பதை குறிக்கும் சொற்கள் இடம் பெற வேண்டும். தலைப்பில் ஸ்பான்சர் அல்லது விளம்பரம் என்பதை குறிப்பிடும் ஹேஸ்டேக்குகளை தலைப்பில் இடம் பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications