இந்தியாவிலேயே காஸ்ட்லி நகரம் மும்பை தான்.. அப்போ மலிவான நகரம் எது.. சென்னை, பெங்களூர் எங்கே பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிலேயே வாழ்வதற்கு மிகவும் காஸ்ட்லியான நகரமாக மும்பை இருக்கும் நிலையில், இந்த லிஸ்டில் சென்னை எங்கே இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பிரபல பிராப்பர்டி கன்சல்டிங் நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் எந்த நகரம் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக இருக்கிறது.

 What is the India’s most expensive city and cheapest city and where chennai ranks

எது விலை குறைவாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான பட்டியலை நைட் ஃபிராங்க் இந்தியா இப்போது வெளியிட்டுள்ளது.

மும்பை தான் காஸ்ட்லி: அதில் இந்தியாவிலேயே வாழ மிகவும் காஸ்ட்லியான நகரமாக மும்பை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எந்தவொரு நகரத்தைக் காட்டிலும் மும்பையில் தான் வீடு வாங்க அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள ஒரு சராசரி குடும்பத்தின் மொத்த வருமானத்தில் எத்தனை சதவிகிதத்தை அவர்கள் இஎம்ஐ தொகையாகக் கட்ட வேண்டி இருக்கிறது என்பதைக் கணக்கிட்டே நைட் ஃபிராங்க் இந்தியா இந்த பட்டியலை உருவாக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது எந்த நகர் சராசரி வருமானத்தில் குறைந்தபட்ச தொகையை இஎம்ஐ தொகையாகச் செலுத்த வேண்டி இருக்கிறதோ.. அது விலை குறைவான நகரமாக இருக்கிறது.

 What is the India’s most expensive city and cheapest city and where chennai ranks

ஈஎம்ஐ அதிகம்: மும்பையைப் பொறுத்தவரை வருமானத்தில் குடும்பத்தினர் தங்கள் சராசரி வருமானத்தில் சுமார் 55%ஐ இஎம்ஐ-க்கு கட்ட வேண்டி இருக்கிறது. அதாவது வருமானத்தில் பாதிக்கும் மேல் EMI-க்கு கட்ட வேண்டி இருக்கிறது. எந்த ஒரு நகரில் ஈஎம்ஐ என்பது வருமானத்தில் 50%க்கு மேல் இருக்கிறதோ அது விலையுயர்ந்த அனைவரும் வீடு வாங்க முடியாத நகரமாகக் கருதப்படும்.

இதில் இரண்டாவது காஸ்ட்லி சிட்டியாக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் இருக்கிறது. அங்கே வருமானத்தில் சுமார் 31 சதவீதத்தை ஒருவர் ஈஎம்ஐ-க்கு செலுத்த வேண்டு உள்ளது. ஹைதராபாத்திற்கு அடுத்து டெல்லி- என்சிஆர் 3ஆவது இடத்தில் இருக்கிறது. அங்கே ஒருவர் தனது வருமானத்தில் 30 சதவீதத்தை ஈஎம்ஐ தொகையாகக் கட்ட வேண்டி உள்ளது.

சென்னை எங்கே: கர்நாடகா தலைநகர் பெங்களூரு மற்றும் நமது தலைநகர் சென்னை ஆகியவை நான்காவது இடத்தில் உள்ளது. இந்த இரு நகரங்களிலும் ஒருவர் தங்கள் வருமானத்தில் 28 சதவீத ஈஎம்ஐ-க்கு கட்ட வேண்டி உள்ளது. அடுத்து மகாராஷ்டிராவின் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா ஆகியவை 26 சதவீதத்துடன் அடுத்த இடத்தில் இருக்கிறது.

 What is the India’s most expensive city and cheapest city and where chennai ranks

மலிவான நகரம்: மறுபுறம் குஜராத்தில் உள்ள அகமதாபாத் தான் இந்தியாவில் வாழ்வதற்கு மிகவும் மலிவான நகரமாக உருவெடுத்துள்ளது, அங்கே ஒரு குடும்பம் தங்கள் வருமானத்தில் வெறும் 23 சதவீதத்தை ஈஎம்ஐக்கு செலுத்தினால் போதும் என்ற நிலையே இருக்கிறது.

கடந்த ஆண்டில் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் ரியல் எஸ்டேட் செலவுகள் அதிகரித்துள்ளன. ஈஎம்ஐ-க்கு கட்ட வேண்டிய தொகை சுமார் 1-2 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி அதன் கடன் விகிதத்தை 250 புள்ளிகள் அதிகரித்ததே இதற்குக் காரணமாகும். இதனால் ஒருவர் கட்ட வேண்டிய ஈஎம்ஐ தொகை என்பது சராசரியாக 14.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+