இஸ்ரோவின் "எக்ஸ்ரே" கண்! முதல் தகவலே மிரள வைக்குதே.. எகிறி அடித்த எக்ஸ்போசாட்! வியக்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரோவின் எக்ஸ்போசாட் சாட்டிலைட் தனது முதற்கட்ட தகவல்களைச் சேகரித்து அனுப்பியுள்ள நிலையில், இந்த எக்ஸ்போசாட் சாட்டிலைட் என்றால் என்ன.. இது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இஸ்ரோ இப்போது நிலவைத் தாண்டியும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை, நெபுளா மற்றும் விண்மீன் வெடிப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய எக்ஸ்போசாட் சாட்டிலைட்டை இஸ்ரோ அனுப்பியிருந்தது.

 What is the ISRO XPoSat mission and its significance as it sends the first information

இந்த எக்ஸ்போசாட் சாட்டிலைட் சூப்பர் நோவா குறித்த முதற்கட்ட தகவல்களை இப்போது பூமிக்கு அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 'காசியோபியா ஏ' என்ற சூப்பர் நோவா தகவல்களை எக்ஸ்போசாட் அனுப்பியுள்ளது.

எக்ஸ்போசாட்: இந்தியா செயற்கைக்கோள் சூரியனைத் தாண்டி தகவல்களைச் சேகரித்து அனுப்புவது இதுவே முதல்முறை.. இந்த எக்ஸ்போசாட் சாட்டிலைட் என்றால் என்ன.. இது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த எக்ஸ்போசாட் செயற்கைக்கோளைத் தான் இஸ்ரோ இந்தாண்டின் முதல் நாளான ஜன.1 காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தியது.. 'எக்ஸ்-ரே போலரிமீட்டர் சாட்டிலைட் என்பதே சுருக்கமே இந்த எக்ஸ்போசாட் ஆகும். இந்த சாட்டிலைட் விண்வெளியில் ஏற்படும் நிகழ்வுகள் மூலம் வெளிப்படும் எக்ஸ்ரே மற்றும் பூமி வட்டப்பாதையில் இருந்து அவற்றின் போலரைசேஷன் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

எக்ஸ்ரேக்கள்: எக்ஸ்ரேக்கள் என்பது ஒரு வகை மின்காந்த கதிர்வீச்சு ஆகும்.. அதன் அலைநீளம் 0.01-10 நானோமீட்டராக இருக்கும். இங்கு 1 நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒரு பில்லியனில் ஒரு பங்கு ஆகும். இது 100-100,000 எலக்ட்ரான்-வோல்ட் (eV) ஆற்றலைக் கொண்டிருக்கும். மின்காந்த கதிர்வீச்சு என்பது ஒரு மின்சார புலமாகும். இது ஒருவருக்கொருவர் செங்குத்தாக மோதிக்கொள்ளும்.. இந்த எக்ஸ்ரேக்கள் விண்வெளியில் நகர்கிறது.

எக்ஸ்ரேக்கள் சிதறும்போது அவை துருவப்படுத்தப்படும்.. உதாரணமாக விண்வெளியில் பயணிக்கும் எக்ஸ்ரே ஒரு அணுவைச் சந்திக்கும் போது, ​​எக்ஸ்ரேயின் மின்சார புலம் ஒரு எலக்ட்ரானை எனர்ஜைஸ் செய்யும். இது ஒரு ஃபோட்டானை வெளியிடும். எக்ஸ்-கதிர்களும் ஃபோட்டான்கள் என்பதால், புதிய ஃபோட்டான் ஒரு எக்ஸ்-ரே ஃபோட்டான் சிதறியது போலத் தோன்றும். வேகமாக நகரும் சார்ஜ் துகள்களின் பாதையைக் காந்தப்புலத்தால் வளையும் போது போலரைஸ்ட் எக்ஸ்ரே உருவாகின்றன.

ஏன் முக்கியம்: இந்த எக்ஸ்ரேக்களை ஆய்வு செய்வதன் மூலம் காந்தப்புலம் எந்தப் பாதையில் செல்கிறது என்பதைக் கண்டறிய முடியும், மேலும் இந்த எக்ஸ்ரேக்கள் காலப்போக்கில் எப்படி உருவாகின்றன என்பதைக் கண்காணிப்பதன் மூலம் பல்சர் போன்ற புலங்கள் குறித்தும் கூடுதல் தகவல்களை பெற முடியும்.

இந்த எக்ஸ்போசாட் சாட்டிலைட் இரண்டு பேலோடுகளை கொண்டது. இந்திய எக்ஸ்ரே போலரிமீட்டர் (POLIX) மற்றும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் டைமிங் (XSPECT) ஆகிய பேலோட்கள் இதில் இருக்கும். இவை இரண்டும் பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.

இந்த சாட்டிலைட் லோயர் புவி சுற்றுப்பாதையில் செயல்படும். அதாவது பூமியில் இருந்து 650 கிமீ தொலைவில் 6 டிகிரி கோணத்தில் இது செயல்படும்.. இந்த சாட்டிலைட் சுமார் ஐந்து ஆண்டுகள் செயல்படும். இந்த காலகட்டத்தில் இது போலரைஸ்ட் எக்ஸ்ரேக்களை கண்காணிக்கும். இது பிரபஞ்சம் சார்ந்து பல தகவல்களை நாம் தெரிந்து கொள்ள உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+