பதவியேற்பு விழாவுக்கு பின் மோடி & அமைச்சர்களுக்கு இன்று இரவு விருந்து.. வகை வகையாக உணவுகள் ரெடி
டெல்லி: இன்று பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பாஜக தேசிய தலைவர் நட்டா தனது இல்லத்தில் புதிய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதற்கிடையே அந்த டின்னர் மெனுவில் உள்ள உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறார்கள்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோரும் பதவியேற்கிறார்கள். இதில் பல்வேறு கூட்டணிக் கட்சிகளுக்கும் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன.
டின்னர்: இன்று பதவியேற்பு விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றோருக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது இல்லத்தில் இரவு விருந்து அளிக்க உள்ளார். இதற்கிடையே நட்டா இரவு விருந்தில் என்ன உணவுகள் இடம் பெற்று இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் மழை தொடங்கிவிட்டாலும் கூட வட இந்தியாவில் பல பகுதிகளில் இன்னுமே கூட கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் வகையிலான உணவுகளே இரவு விருந்தில் அதிகம் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரவு விருந்து மெனுவில் உள்ள உணவுகள் குறித்த தகவல்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மெனு: அதில் ஜூஸ்கள், மில்க் ஷேக்குகள், ஸ்டஃப்டு லிச்சி, மட்கா குல்ஃபி, மாம்பழ கிரீம் மற்றும் ரைத்தா ஆகியவை டின்னரில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நிலவும் அதீத வெப்பத்தைக் கருத்தில் கொண்டு இந்த இரவு விருந்து மெனு தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், மெனுவில் பல்வேறு பாரம்பரிய உணவுகளும் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தானின் பாரம்பரிய உணவான ஜோத்புரி சப்ஜி, பிரியாணி உள்ளிட்டவை மெனுவில் உள்ளன. இந்த இரவு டின்னரில் ஐந்து வகையான ரொட்டிகளும் இடம் பெற்றுள்ளன. அமைச்சர்களின் டயர்ட்டை பொறுத்து அவர்கள் தேவையான ரொட்டிகளை தேர்வு செய்து கொள்ளலாம். பஞ்சாபி உணவுகளுக்கு எனத் தனியாக ஒரு கவுண்டரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினை: தினை (millet) விரும்புவோருக்கு, மெனுவில் பஜ்ரா கிச்சடி இருக்கிறது.. அதேபோல ஐந்து வகையான ஜூஸ்கள், மில்க் ஷேக்குகள் இதில் இருக்கின்றன.. தயிர் மூலம் செய்யப்படும் ரைத்தா மட்டும் மூன்று வகையில் இந்த டின்னரில் இடம் பெற்று இருக்கிறதாம்.
இறுதியில் இனிப்பு என வரும் போது மொத்தம் 8 வகையான இனிப்புகள் இதில் உள்ளன. பாரம்பரிய ராஜஸ்தானி இனிப்பான கேவாரில் நான்கு டைப், ரஸ்மலை ஆகியவை இதில் உள்ளன.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications