திமுகவிடம் இருந்து போன "மெசேஜ்.." உடனே நடந்த முக்கிய மாற்றம்.. தேசியளவில் முக்கியம்! ஏன் தெரியுமா
டெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் வகையில் வரும் ஜூன் 12ஆம் தேதி பாட்னாவில் நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குக் குறைவாகவே உள்ள நிலையில், இப்போதே கூட்டணி குறித்த பேச்சுக்களும் கிளம்பிவிட்டன.
குறிப்பாக ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் அணி திரள வேண்டும் என்பதைப் பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் முயன்று வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்: இதற்கிடையே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் ஜூன் 12 ஆம் தேதி மாபெரும் கூட்டம் நடைபெற இருந்தது. இந்தக் கூட்டத்தைப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடத்த இருந்தார். இந்தக் கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒரே மேடையில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது. இதனால் தேசியளவில் இது முக்கியமான நிகழ்வாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் இந்தக் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.. இதற்கிடையே இந்தக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம். பாஜகவுக்கு எதிராகக் கட்சிகளில் முக்கிய வரிசையில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக என இரு கட்சிகளும் கூட்டத்தைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன. இதை ஏற்றே இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூன் 12ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் ராகுல் காந்தியால் கலந்து கொள்ள முடியாது என்பதால் நிகழ்ச்சியைத் தள்ளி வைக்குமாறு காங்கிரஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதாவது இப்போது ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதை எல்லாம் முடித்துக் கொண்டு ராகுல் காந்தி வரும் ஜூன் 15ஆம் தேதி தான் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங். மற்றொரு மூத்த தலைவரான சோனியா காந்தியும் மருத்துவ காரணங்களுக்காக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். அவருக்குத் துணையாகப் பிரியங்கா காந்தி சென்றுள்ளார். இதனால் காங்கிரஸ் நிகழ்ச்சியைத் தள்ளி வைக்குமாறு கேட்டிருந்தது.

திமுகவிடம் இருந்து போன மெசேஜ்: அதேபோல திமுகவும் நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்வார். இதன் காரணமாகவே நிகழ்ச்சியைத் தள்ளி வைக்குமாறு திமுக தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. சமீபத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போதும் ஸ்டாலின் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கூட்டத்தைத் தள்ளி வைக்கப்படலாம் என அப்போதே முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இப்படி எதிர்க்கட்சி வரிசையில் முக்கிய இடத்தில் இருக்கும் இரு கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதை ஏற்றே அந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசியளவில் எதிர்க்கட்சிகளை ஒரே மேடையில் கொண்டு வரும் கூட்டம் என்பதால், அனைத்து எதிர்க்கட்சிகளையும் இதில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் இறங்கியுள்ளார்.
நிதிஷ் குமார்: 2024 லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறங்கியுள்ளார். இதற்காக அவர் இதுவரை மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துள்ளார். இவர்கள் அனைவரும் நிதிஷ்குமாரின் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க யூனியன் பிரதேசமான டெல்லியில் அரசு அதிகாரிகளின் நியமனங்களைக் கண்காணிக்கக் குழு அமைப்பது தொடர்பாக மத்திய கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அரவிந்த் கெஜ்ரிவால் பல எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தார். இதுவும் எதிர்க்கட்சிக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. இதுவரை பல எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications