கலர் கலராக இருந்த சாண்டா தாத்தா! "சிவப்பாக" மாறியது எப்படி தெரியுமா! இடையில் புகுந்த கோலா கம்பெனி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிறிஸ்துமஸ் என்றவுடன் நம்மில் பெரும்பாலானோருக்கு ஞாபகம் வருவது சான்டா கிளாஸ் அவரது சிவப்பு கலரும் தான். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் நமக்குத் தெரியாது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மிகப் பெரியளவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா உள்ளது.

ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடுகிறோம். இந்தாண்டு நாளை நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் சூப்பராக நடந்து வருகிறது.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

உலகெங்கும் கொண்டாடப்படும் மிக முக்கிய ஒரு பண்டிகையாகவே இந்த கிறிஸ்துமஸ் விழா உள்ளது. பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரை விடுமுறை தான். எனவே, இந்த காலகட்டம்தான் அவர்களுக்கு முக்கியமான விடுமுறை காலகட்டமாக உள்ளது. ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் முழுக்க நட்சத்திரங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கிறிஸ்துமஸ் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது சான்டா கிளாஸ்தான்.

 சான்டா கிளாஸ்

சான்டா கிளாஸ்

தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் அந்த வயதான சான்டா கிளாஸ், கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள் வந்து பரிசுப் பொருட்களைக் கொடுப்பார் என்பதே பலரது நம்பிக்கை. அதிலும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு சான்டா கிளாஸ் என்றால் அவ்வளவு பிடிக்கும்.. ஆமாம்.. பரிசுகளைத் தரும் சான்டா கிளாஸை யாருக்குத் தான் பிடிக்காது. அதேபோல சான்டா கிளாஸ் என்றவுடன் நம் அனைவருக்கும் அவரது அந்த சிவப்பு நிற ஆடையும் கண் முன்னே வந்து போகும். ஆனால், உண்மையில் சான்டா கிளாஸ் எப்போதும் இந்த சிவப்பு நிறத்தில் மட்டுமே இருந்தது இல்லை.

 கலர் கலரான சான்டா

கலர் கலரான சான்டா

அதாவது 1800களில் சான்டா கிளாஸுக்கு ஒரு குறிப்பிட்ட உருவருமோ அல்லது உடையோ இருந்தது இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சான்டா கிளாஸை வரைவார்கள். சில சான்டா கிளாஸ் குண்டாவகவும் சில சான்டா கிளாஸ் குள்ளமாகவும் இருக்கும். சில சான்டா கிளாஸ்கள் அச்சுறுத்தும் வகையில் கூட இருக்குமாம். அப்போது பெரும்பாலான சான்டா கிளாஸ்கள் கருப்பு வெள்ளை நிறத்திலேயே இருந்தது. அதேபோல சான்டாவின் உடைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். பச்சை, மஞ்சள், பிரவுன் என வரைபவர் விருப்பத்திற்கு ஏற்ப சான்டா கிளாஸுக்கு உடைகளை அணிவிப்பார்கள்.

 சிவப்பு நிற ஆடை

சிவப்பு நிற ஆடை

1870களில் தான் சான்டாவுக்கு நாம் இப்போது பார்க்கும் சிவப்பு ஆடை கேப், கருப்பு பெல்ட் ஆகியவை அணிவிக்கப்பட்டது. 1881கள் முதலே இந்த சான்டாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. இருந்தாலும் கூட, அப்போது வரையப்பட்ட அனைத்து சான்டாகளும் இதே நிறத்தில் இல்லை. அப்போதும் பல்வேறு நிறங்களில் சான்டா கிளாஸ்கள் இருந்தனர். இருப்பினும் போன நூற்றாண்டில், அதாவது 20ஆம் நூற்றாண்டில் நிலைமை அப்படியே மாற தொடங்கியது. வெறும் சில ஆண்டுகளிலேயே நிலைமை தலைகீழாக மாறியது.

 விளம்பர யுக்தி

விளம்பர யுக்தி

இதற்கு முக்கிய காரணமே வணிகம் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! அப்போதே சான்டா சிவப்பு நிறத்தில் உடை அணியத் தொடங்கியிருந்தாலும், சான்டா இப்போது இருந்ததை போல இருக்கவில்லை. நிறைய வேறுபாடுகள் இருக்கவே செய்கிறது. நாம் இப்போது பார்க்கும் சான்டா கிளாஸ் என்பது வணிக விளம்பர யுக்தியின் (commercialism) ஒரு முடிவுதானே தவிர வேறு எதுவும் இல்லை. அதுக்கு காரணம் கோகோ கோலாதான். இப்போது உங்களுக்கு கோகோ கோலாவின் சிவப்பு நிறமும் சான்டாவின் சிவப்பு நிறமும் ஒரே போல இருப்பதற்கான காரணம் புரியும்.

 கோகோ கோலா

கோகோ கோலா

அப்போதெல்லாம் கோகோ கோலாவை வெயில் காலத்தில் மட்டுமே குடிப்பார்கள். இதனால் குளிர் காலத்தில் கோகோ கோலா விற்பனை படுமோசமாக இருக்கும். இதனால் குளிர் காலத்தில் கோகோ கோலா விற்பனையை அதிகரிக்கவே சான்டா கிளாஸை கையில் எடுத்தது கோகோ கோலா நிறுவனம். சான்டா கிளாஸ் உடன் கோகோ கோலாவை மையப்படுத்தி தொடர்ச்சியாக பல்வேறு விளம்பரங்கள் வெளியிட்டது. குளிர் காலம் என்றாலும் கூட குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்கும் போது கோகோ கோலாவை குடிக்கலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த விளம்பரம் ரொம்பவே மெகா ஹிட் ஆனது. அதேபோல கோகோ கோலா விற்பனையும் நல்ல ஏற்றம் அடைந்தது.

 இத்தாலி பிஷப்

இத்தாலி பிஷப்

இதுவே நாம் இப்போது சிவப்பான சான்டா கிளாஸை பார்க்கக் காரணமாக உள்ளது. உண்மையில் கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையில் சான்டா கிளாஸ் என்ற ஒரு கேரக்டரே இல்லையாம். இதைச் சொல்வது இத்தாலி நாட்டை சேர்ந்த பிஷப் அன்டோனியோ ஸ்டாக்லியானோ. கடந்தாண்டு இத்தாலி நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய பிஷப், "உண்மையில் சாண்டா கிளாஸ் என யாரும். இதை நான் சொல்வதால், குழந்தைகள் ஏமாற்றமடையலாம். உண்மையில், அவர் அணிந்திருக்கும் சிவப்பு நிறமானது, விளம்பர நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாக கோகோ கோலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதே உண்மை" என்றார்.

 கோகா கோலா

கோகா கோலா

இதுதான் சான்டா கிளாஸ் உண்மையில் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறார் என்பதற்கான காரணம். இன்னும் சிலர் சான்டா கிளாஸை உருவாக்கி அவருக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுத்ததே கோகோ கோலா தான் நினைக்கிறார்கள். ஆனால், அதுவும் உண்மை இல்லை. சான்டா கிளாஸ் முன்பே இருந்தது. அவருக்கான சிவப்பு உடையும் பரவலாக இருந்தது. ஆனால், அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது தான் கோகோ கோலா. அந்த நிறுவனத்தின் மார்கெட்டிங் யுக்திதான் சிவப்பு நிற சான்டா கிளாஸை ஐக்கான மாற்றிவிட்டது. வெறும் 10 ஆண்டுகளில் அனைத்து சான்டா கிளாஸ்களும் சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது.

 இரு தரப்பிற்கும் வெற்றி

இரு தரப்பிற்கும் வெற்றி

கோகோ கோலா நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த சிவப்பு நிற சான்டாவை கோகோ கோலா தங்கள் மார்கெடிங்கிற்கு யுக்திக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.குழந்தைகளுக்கும் குதுகலத்தைத் தந்த சான்டாவின் சிவப்பு நிறம் கிடைக்கவும் இது காரணமாக இருந்தது.. மறுபுறம் கோகோ கோலாவின் விற்பனையும் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. மொத்தத்தில் இதனால் இரு தரப்பிற்குமே வெற்றியைத் தரும் யுக்தியாக அமைந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+