போட்டியை அறிவித்த திக்விஜய் சிங்! டக்குனு சசி தரூர் செய்த காரியம் இருக்கே! வியந்துபோன தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள இரு தலைவர்களும் திடீரென சந்தித்துக் கொண்டு உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி இருக்கும் நிலையில், புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கினர்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அக். 17ஆம் தேதி புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

 அசோக் கெலாட்

அசோக் கெலாட்

இதில் நேரு குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து சோனியாவின் நம்பிக்கைக்குரியவரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட் இதில் களமிறங்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதை அவரே கூட அறிவித்து இருந்தார். இருப்பினும் ஒருவருக்கு ஒரு பதவி என்பதால் தனது ராஜஸ்தான் முதல்வர் பதவியை அவர் இழக்கும் சூழல் உருவானது.

 போர்க்கொடி

போர்க்கொடி

அவருக்குப் பதிலாக இளம் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டை டெல்லி தலைமை முதல்வராக்கத் திட்டமிட்டது. இருப்பினும், கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர். முதல்வரைத் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த அவர்கள், சச்சின் பைலட்டிற்கு முதல்வர் பதவி கொடுத்தால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகப் போர்க்கொடி தூக்கினர்,

 சசி தரூர்

சசி தரூர்

இது காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவலியை உண்டாக்கியது. மிக எளிதாக நடக்க வேண்டிய விஷயம் கூட காங்கிரஸில் சிக்கல் மிகுந்ததாக மாறுவதாக அரசியல் வல்லுநர்கள் சாடினர். இது ஒரு பக்கம் இருக்கத் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் சத்தமில்லாமல் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தேவையான விஷயங்களைச் செய்து வந்தார். தேர்தலில் போட்டியிட முடிவு செய்த உடன் அவர் நேரடியாகச் சோனியா காந்தியைச் சந்தித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

 திக்விஜய் சிங்

திக்விஜய் சிங்


வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதும் முதல் ஆளாகச் சென்று விண்ணப்பத்தையும் பெற்றார். ஆனால், மறுபுறம் ராஜஸ்தான் குழப்பம் காரணமாக கெலாட் மீது கடும் அதிருப்தி அடைந்தது டெல்லி தலைமை. இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். இந்தச் சூழலில் தான், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்க உள்ளதாக மற்றொரு மூத்த தலைவரான திக்விஜய் சிங் அறிவித்து உள்ளார்.

 திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

அசோக் கெலாட்டிற்கு பதிலாக இப்போது திக்விஜய் சிங்யை டெல்லி தலைமை களமிறக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், திக்விஜய் சிங்கை சசி தரூர் நேரில் சந்தித்தார். இருவரும் அரவணைத்துக் கொண்டு நிற்கும் படத்தையும் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது இரு பகையாளிகளுக்கு இடையேயான சண்டை அல்ல, சக ஊழியர்களுக்கு இடையிலான நட்பு ரீதியான போட்டி என்று பதிவிட்டுள்ளார்.

 ஆமோதித்த திக்விஜய் சிங்

ஆமோதித்த திக்விஜய் சிங்

மேலும், காங்கிரஸை வெற்றி பெறச் செய்வதே பொதுவான குறிக்கோள் என்றும் சசி தரூர் பதிவிட்டு உள்ளார். இதை ஆமோதித்த திக்விஜய் சிங், தங்கள் போராட்டம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது என்றும் இருவரும் காந்தி -நேரு சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இருவரும் நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+