கவனிச்சீங்களா.. உதயநிதிக்கு முதல்வர் தந்த கவுரவம்.. அப்படின்னா அதுதானா.. திக்குமுக்காட வைத்த திமுக
உதயநிதியை முதல்வர் டெல்லி விழாவில் கௌரவித்துள்ளார்
டெல்லி: உதயநிதி ஸ்டாலினை முதல்வர் ஸ்டாலின் இன்று கௌரவப்படுத்தி உள்ளது, இன்றைய டெல்லி விழாவின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..
கடந்த 2013ம் ஆண்டே திமுகவுக்கு இடத்தை மத்திய அரசு ஒதுக்கிவிட்ட போதிலும், கடந்த வருடம்தான் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, சமீபத்தில் இதன் பணிகள் முடிந்துள்ளன.

கருத்தரங்கு
மூன்று தளங்கள் உள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காக பெரிய அரங்கம் உள்ளது. முதல் தளத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசும் இடம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.. முதல் தளத்திலும், 2-ம் தளத்திலும் கருத்தரங்கு அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 3-வது தளத்தில் எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்குவதற்காக அறைகள் கட்டப்பட்டுள்ளன..

அடையாளம்
மேலும் நூலகம், செய்தியாளர்களுக்கென தனி ரூம்கள், உள்ளிட்ட வசதிகளுடன் பிரமாண்டமாக எழில்நயத்துடன் அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. எப்படி சென்னையின் அடையாளமாக அறிவாலயம் உள்ளதோ, அதுபோல டெல்லியின் அடையாள சின்னமாக இந்த அறிவாலயம் உள்ளது.. இதற்கு காரணம், அகில இந்திய அளவில் இப்போது முக்கியமான கட்சியாக திமுக விஸ்வரூபமெடுத்துள்ளதுதான்..

திராவிட மாடல்
அதுமட்டுமல்லாமல், திமுக ஏற்படுத்திய திராவிட மாடல் ஆட்சி நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. இதுபோக பாஜகவுக்கு மாற்றான ஒரு அணியை திரட்டும் முயற்சியை இப்போது ஸ்டாலின் முன்னெடுத்து வருவதுதான். இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வழங்கப்படுகிறது.. இந்த நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெற்று வருகிறது..

சீனியர்கள்
திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா குத்துவிளக்கு ஏற்றினர்.. இதையடுத்து, துரைமுருகன், டிஆர் பாலுவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்.. பிறகு, உதயநிதிக்கும் கவுரவம் கொடுத்தார்.. சீனியர் அமைச்சர்களுக்கு அடுத்தபடியாகவே, உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்த முதல்வர் நினைவுபரிசு வழங்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு கவுரவம் வழங்கப்பட்ட பிறகுதான், ஆர்எஸ் பாரதி, ஆ.ராசா, கனிமொழி போன்ற சீனியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது என்பது, விழாவில் பங்கேற்ற பலரையும் புருவம் தூக்க வைத்துள்ளது. இந்த முறை டெல்லி செல்லும்போது உதயநிதியையும் முதல்வர் கையோடு அழைத்து சென்றது குறித்தும் சிலர் கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைத்திருந்தனர்..

டெல்லி
சொந்த கட்சியின் அலுவலக கட்டிட திறப்பு விழாவுக்கு, இளைஞர் அணி செயலாளர் பங்கேற்காமல் இருக்க முடியுமா? இது உட்கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் கூறப்பட்டு வந்தது.. எனினும், சமீப காலமாகவே, உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.. அந்த வகையில், சீனியர் அமைச்சர்கள் வரிசையில் உதயநிதியை ஸ்டாலின் கௌரவித்துள்ளது பெரும்பாலானோரின் கவனத்தை திமுக தரப்பிலேயே ஈர்த்து வருகிறது..
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications