இன்று பிரதமராக பதவியேற்கும் மோடி.. சம்பளம் எவ்வளவு! மற்ற அமைச்சர்களுக்கு ஊதியம் & பிற சலுகைகள் என்ன?
டெல்லி: நமது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிலையில், அவரின் சம்பளம் என்ன, அவருக்குக் கிடைக்கும் சலுகைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்கிறார். இன்று மாலை 7.15 மணிக்கு அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதற்கிடையே நமது நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
குடியரசுத் தலைவர்: முதலில் குடியரசுத் தலைவர்.. நமது நாட்டின் குடியரசுத் தலைவர் தான் நமது ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருக்கிறார். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களின் பிரதிநிதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நமது குடியரசுத் தலைவர் உலகின் மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வசிக்கிறார்.. அரசு பதவிகளில் அதிகபட்ச சம்பளம் இவருக்குத் தான் வழங்கப்படுகிறது. நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பவருக்கு 1951ஆம் ஆண்டின் ஜனாதிபதியின் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் சட்டத்தின்படி மாதம் ரூ 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
சலுகைகள்: இது தவிரக் குடியரசுத் தலைவராக இருப்பவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக வருமான வரி செலுத்துவதில் இருந்து ஜனாதிபதிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் ரயில் மற்றும் விமானத்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். இலவச வீடு, மருத்துவம் மற்றும் அலுவலகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் உட்பட பல்வேறு அலவன்ஸ்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
குடியரசுத் தலைவராக இருப்பவருக்கு ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்குக் குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ. 1.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.. மேலும், அவருக்குப் பங்களா ஒன்றும் வழங்கப்படும். அதற்கு எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இரண்டு இலவச லேண்ட்லைன்கள், ஒரு மொபைல், ஐந்து பணியாளர்கள் வழங்கப்படும். மேலும், குடியரசுத் தலைவராக இருந்தவர் ஓய்வு பெற்ற பிறகும் ரயில் அல்லது விமானத்தில் இலவசமாகப் பயணிக்கலாம்.. கூடவே மற்றொரு நபரையும் இலவசமாக அழைத்துச் செல்லலாம்.
பிரதமர்: அடுத்து பிரதமர். நாட்டின் பிரதமராக இருக்கும் நபர் லோக்சபா அல்லது ராஜ்யசபாவில் உறுப்பினராக இருக்க வேண்டும். அவருக்கு மாதம் ரூ. 1.66 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும். அடிப்படை ஊதியமாக ரூ.50,000, expense allowanceஆக ரூ.3,000, நாடாளுமன்ற அலவன்ஸாக ரூ.45,000, தினசரி அலவன்ஸ் ரூ.2,000 வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து தான் மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
சலுகைகள்: குடியரசுத் தலைவரைப் போலவே பிரதமருக்குப் பங்களா வழங்கப்படும்.. எஸ்பிஜி பாதுகாப்பு, அரசு வாகனங்கள் மற்றும் விமானங்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும், சர்வதேசப் பயணங்களுக்குப் பிரதமர் மோடி செல்லும் போது பயண செலவு, தங்குமிடம் மற்றும் உணவுக்கான சலவைகளை அரசு பார்த்துக் கொள்ளும். மேலும், பிரதமராக இருப்பவர் ஓய்வு பெற்ற பிறகும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தங்குமிடம், மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மேலும், எஸ்பிஜி பாதுகாப்பும் இலவசமாக வழங்கப்படும்.
எம்பிக்கள்: அடுத்து எம்பிக்கள்.. லோக்சபா தேர்தலில் தேர்வான எம்பிக்களின் மாச சம்பளம் ரூ.1 லட்சமாகும்.. மேலும், அவர்களின் தினசரி அலவன்ஸ் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும். இவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.50,000 ஆகும்.. இது தவிர நாடாளுமன்ற அமர்வுகள், குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தினசரி ரூ.2,000 வழங்கப்படும்.. மேலும், எம்.பி.க்களுக்கு தொகுதி உதவி தொகையாக மாதம் ரூ.45,000 மற்றும் அலுவலக செலவு அலவன்ஸாக ரூ.45,000 வழங்கப்படும்.
எம்பிக்களுக்கு வேறு பல சலுகைகளும் உள்ளன. அதாவது எம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையைப் பெறலாம்.. மேலும், எம்பியாக இருக்கும் போது அவர்களுக்கு இருப்பிடங்கள் டெல்லியில் இலவசமாக ஒதுக்கப்படும். ஒருவேளை இருப்பிடம் கிடைக்கில்லை என்றால் மாதம் ரூ. 2 லட்சம் அலவன்ஸ் பெறலாம். ஓராண்டிற்கு எம்பிக்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 36 முறை இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம்.. முதல் வகுப்பு ஏசி ரயில் பயணமும் இவர்களுக்கு இலவசமாகும். ஓய்வு பெற்ற பிறகு இவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அமைச்சர்கள்: மத்திய அமைச்சர்களுக்கு என்று தனியாகச் சம்பளம் இல்லை. அவர்களும் எம்பி பெறும் சம்பளத்தையே ஊதியமாகப் பெறுவார்கள். அவர்களுக்கு வாகனங்கள், பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், கூடுதல் அலவன்ஸ்களும் வழங்கப்படும்.. , கேபினட் அமைச்சர்களுக்கு மாதம் ரூ 2,000 மற்றும் இணை அமைச்சர்களுக்கு ரூ 1,000 கூடுதல் அலவன்ஸ்களாக வழங்கப்படும்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications