"அவர் எப்படி பிரதமராகலாம்!" ரிஷி சுனக்கிற்கு எதிராக இனரீதியான தாக்குதல்.. கமெடியன் நோவா நறுக் பதிலடி
டெல்லி: பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதற்கு இனவெறி ரீதியாக ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு கமெடியன் ட்ரெவர் நோவா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த முடிவுகள் பொருளாதார ரீதியாகப் பல நெகடிவ் தாக்கங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது. அங்கு ஆளும் கட்சித் தலைவரே பிரதமராக இருப்பார் என்பதால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது.

ரிஷி சுனக்
இதில் போட்டியிடக் குறைந்தபட்சம் 100 எம்பிகளின் ஆதரவு தேவை. இதில் ரிஷி சுனக்கிற்கு 140க்கும் மேற்பட்ட கன்சவர்வேடிவ் கட்சி எம்பிகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால், அவருக்கு எதிராகக் களமிறங்க விரும்பிய எந்தவொரு நபருக்கும் இந்தளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் போட்டியின்றி பிரதமர் பதவிக்குத் தேர்வானார். நேற்று தான் அவர் அதிகாரப்பூர்வமாகத் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

வீடியோ
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல்முறையாகும். இதற்குப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல கமெடியன் ட்ரெவர் நோவா தனது டேய்லி ஷோ என்ற டாக் ஷோவில் ரிஷி சுனக் குறித்துப் பேசியுள்ளார். ரிஷி சுனக் மீதான இன ரீதியான விமர்சனங்களுக்கும் அவர் நறுக் பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் அவர் வேறு பல விஷயங்கள் குறித்தும் நக்கலாக தனது கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை
அந்த வீடியோவில் ரிஷி சுனக் வெறும் 42 வயதில் பிரதமர் பதவிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடும் ட்ரெவர் நோவா, இதன் மூலம் குறைந்தது 42.5 வயது வரை அவர் பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதி என்கிறார். பிரிட்டனில் கடந்த சில மாதங்களில் மட்டும் இரு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அதை நக்கல் செய்யும் வகையிலேயே அவர் இப்படிப் பேசியுள்ளார். அதேநேரம் அனைத்து பிரிட்டன் மக்களும் மகிழ்ச்சியாக இல்லை என்று குறிப்பிடும் ட்ரெவர் நோவா, இது தொடர்பாக வீடியோ காட்டுகிறார்.

இன ரீதியில் அட்டாக்
அதில் பிரிட்டன் ரேடியோ ஷாவுக்கு தொடர்பு கொள்ளும் ஒருவர், இன ரீதியாக சில கருத்துகளைத் தெரிவிக்கிறார். வெள்ளை இனத்தைச் சேராத ஒருவர் பிரிட்டன் பிரதமராவது நல்லது இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அந்த நபர், "என்னால் பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியாவுக்குப் பிரதமராக முடியும். இங்குப் பிரிட்டனில் 85% பேர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்கள் தங்களைப் போன்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதையே விரும்புவார்கள்" என்கிறார்.

ட்ரெவர் நோவா நறுக் பதிலடி
மேலும், தனது கருத்து சிலருக்குப் பிடிக்காது என்றாலும் கூட பெரும்பாலானோரின் எண்ணம் இதுதான் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அந்த நபரின் கருத்திற்கு ட்ரெவர் நோவா நறுக் பதிலடி கொடுத்துள்ளார். "ஆமாம். அவர் சொல்வது ரொம்ப சரி.. வெள்ளையர்கள் தங்களைப் போல யாரும் இல்லாத நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்ய முயன்றதை உங்களால் கற்பனை கூடச் செய்ய முடியாது" என்று பதில் கூறி உள்ளார்.

மாறிவிட மாட்டார்
கடந்த காலங்களில் இந்தியா, ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளை வெள்ளையர்கள் ஆட்சி செய்து வந்ததையே குறிப்பிடும் வகையில் அவர் இப்படிப் பேசியுள்ளார். மேலும், "ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்குதான். அப்படியிருக்கும் போது அவர்களுக்கு இதில் என்ன பிரச்சினை வந்தது எனத் தெரியவில்லை. ரிஷி சுனக் ஒன்னும் திடீரென ஒரு நாள் மாறிவிடமாட்டார்" என்று கூறி கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்.

நக்கல்
மேலும், "அதுமட்டுமின்றி இப்போது ரிஷி சுனக் பிரதமரானது வெள்ளைக்காரர்களுக்கு நல்ல விஷயம் தான் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதாவது 400 ஆண்டுகளில் முதல்முறையாகப் பிரிட்டன் மக்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த முறை அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரே காரணம் என்று தைரியமாகக் குற்றஞ்சாட்டலாம்" என்று நக்கலாக கூறுவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications