உங்க டேட்டாவை யாரெல்லாம் வாங்கலாம்? மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா
டெல்லி: மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள Digital Personal Data Protection (DPDP) எனப்படும் டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா (டிபிடிபி) பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிபிடிபி மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இந்த மசோதா மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தப்பட்டது. தீவிர விவாதத்திற்கு பின் இது தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு செல்லும் வாய்ப்புகளும் உள்ளன. தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாக எதிர்க்கட்சித் தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. என்ன மசோதா இது?
தனி நபர் டேட்டா: தனி நபரின் பர்சனல் டேட்டா அதாவது தரவுகளை எப்படி கையாளுவது என்பது தொடர்பான மசோதா ஆகும் இது. அதாவது உங்களின் டேட்டாவை எடுத்துக்கொள்வோம்.. இது அரசிடமும், சில தனியார் நிறுவனங்களிடமும் இருக்கும். அதாவது உங்களின் ஆதார் விவரம் தொடங்கி சிபில் ஸ்கோர் வரை பலரிடம் இருக்கும்.
இதை அவர்கள் எதற்கு பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்தலாம், எது வரை பயன்படுத்தலாம், எப்படி பாதுகாக்கலாம், இது ஒருவேளை கசிந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் வரையறுக்க கூடிய மசோதாதான் டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா (டிபிடிபி) ஆகும். நீங்கள் எங்கு எல்லாம் உங்கள் தனிப்பட்ட தரவுகளை கொடுக்கலாம், அதை வாங்கும் நிறுவனங்கள் அதை எப்படி கையாள வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதை டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா (டிபிடிபி) வரையறுக்கிறது.
ஒருவரிடம் இருந்து எதற்காக தரவுகளை வாங்க வேண்டும், எங்கே தரவுகளை வாங்க கூடாது, எந்த அளவிற்கு வாங்க வேண்டும், எந்த தரவுகளை எல்லாம் வெளிநாட்டிற்கு அனுப்ப முடியும், பாதுகாப்பதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று இந்த டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா (டிபிடிபி) பட்டியல்களை உருவாக்கி உள்ளது.
புது அமைப்பு: தனி நபருக்கும், நிறுவனங்களுக்கும் தனி தனி விதிமுறைகளை டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா (டிபிடிபி) உருவாக்கி உள்ளது. அதோடு இந்த விவகாரங்களை கையாள்வதற்காக Data Protection Board of India என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இந்த டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா (டிபிடிபி) தெரிவித்துள்ளது. முக்கியமாக இந்த மசோதாவின் மூலம் அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளிடம் உங்கள் டேட்டா கொடுக்கப்பட்டு ஒருவேளை அது லீக்காகும் பட்சத்தில் அரசு மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
வழக்கு தொடுக்க முடியாது. இந்த மசோதா அரசு மீதான நடவடிக்கையை தடுக்கும் கவசத்தை அளிக்கும் திறன் கொண்டது. அதேபோல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை இந்த மசோதா நிர்ணயம் செய்கிறது.

அபராதம்: ஒரு நிறுவனம் தேவையான அளவு மட்டுமே டேட்டாவை பெற முடியும். அதற்கு மேல் டேட்டாவை பெற முடியாது. டேட்டாவை பயன்படுத்துவதற்கான தேவை முடிந்த பின் அதை அழித்துவிட வேண்டும். சேமித்து வைக்க கூடாது. டேட்டா ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து கசியும் பட்சத்தில் ரூபாய் 50 கோடியில் இருந்து 250 கோடி ரூபாய் வரை தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்ப்பு: நாடாளுமன்றத்தின் மக்களவையில் இந்த மசோதா மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டிபிடிபி மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முக்கியமாக இந்த மசோதாவின் மூலம் அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளிடம் உங்கள் டேட்டா கொடுக்கப்பட்டு ஒருவேளை அது லீக்காகும் பட்சத்தில் அரசு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற பிரிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications