"வெள்ளை" நுரையீரல்.. சீனாவில் குழந்தைகளை அலறவிடுதே நிமோனியா பாதிப்பு.. இதுவாக கூட இருக்கலாம்! பகீர்
டெல்லி: சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அதேபோன்ற பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை நுரையீரல் சிண்ட்ரோம் குறித்து நாம் பார்க்கலாம்,
கடந்த சில வாரங்களாகவே சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக அங்குள்ள குழந்தைகள் மத்தியில் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பும் கூட எச்சரித்துள்ளது. இருப்பினும், இதற்கான காரணம் குறித்து நமக்குத் துல்லியமாகத் தெரியவில்லை, இருப்பினும், புதிய நோய் கிருமியால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று சீனா கூறியுள்ளது.
பாதிப்பு: சீனாவில் இப்போது பரவும் நிமோனியா பாதிப்பு கிட்டதட்ட உலகின் மற்ற பகுதிகளிலும் இருக்கும் White Lung Syndrome எனப்படும் வெள்ளை நுரையீரல் சிண்ட்ரோம் போலவே இருக்கிறது. இது ஒரு வகையான பாக்டீரியா நிமோனியா தொற்றாகும். இந்த சுவாச நோய் பெரும்பாலும் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தான் அதிகம் பரவுகிறது. இந்த திடீர் நிமோனியா பாதிப்பிற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், மைக்கோப்ளாஸ்மா நிமோனியா என்ற நோய்ப் பாதிப்பு காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். மைக்கோப்ளாஸ்மா என்பது பொதுவாகச் சுவாச கோளாறை ஏற்படுத்தும் ஒருவித பாக்டீயாவாகும். பொதுவாக வெள்ளை நுரையீரல் சிண்ட்ரோம் என்பது குழந்தைகளின் மார்பு பகுதியில் ஏற்படுகிறது. அங்கே வெள்ளை நிறத்தில் திட்டுகள் ஏற்படும். இவை சாதாரண எக்ஸ்ரே மூலமாகவே கண்டுபிடிக்க முடியும். அதாவது சுவாசக் கோளாறு, நுரையீரல் அல்வியோலர் மைக்ரோலிதியாசிஸ் மற்றும் சிலிக்கா ஆகியவை ஏற்படும்.
என்ன நடக்கும்: அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் சிண்ட்ரோம் (ARDS) என்பது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் திரவம் சேரும்போது ஏற்படும் ஒரு தீவிர நுரையீரல் பாதிப்பாகும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். நிமோனியா, செப்சிஸ் மற்றும் அதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படும்.
பிஏஎம் எனப்படும் நுரையீரல் அல்வியோலர் மைக்ரோலிதியாசிஸ்.. இதுவும் ஒரு வகையான அரிய வகை நுரையீரல் நோயாகும்.. இது நுரையீரலின் காற்றுப் பைகளில் கால்சியம் படிவதால் எமஏற்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு வலி ஆகியவை ஏற்படும். அடுத்து சிலிக்கோசிஸ் என்பது சிலிக்கா துகள்களை அதிகம் சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் நோயாகும். இந்த சிலிக்கா துகள்கள் தூசி மணல், கல் உள்ளிட்ட பொருட்களில் காணப்படுகிறது. இந்த பாதிப்பு மூச்சுத் திணறல், இருமல் மற்றும் மார்பு வலியை ஏற்படுத்தும்.
அறிகுறிகள் என்ன: வெள்ளை நுரையீரல் சிண்ட்ரோம் என்ற இந்த நோய்க்கு பல்வேறு அறிகுறிகள் இருக்கிறது. ஆனால் பொதுவான அறிகுறிகளாக மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை இருக்கிறது.
காரணம் என்ன: வெள்ளை நுரையீரல் சிண்ட்ரோம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.. இது பாக்டீரியா, வைரஸ் மற்றும் சுற்றுச்சூழல் எனப் பல காரணங்களால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இன்ஃப்ளூயன்ஸா அல்லது கொரோனா போன்ற வைரஸ்கள் நுரையீரலின் காற்றுப் பைகளை சேதப்படுத்துவதன் மூலம் இந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேபோல மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பாக்டீரியாக்கள், நுரையீரலில் தொற்றுநோயை ஏற்படுத்துவதன் மூலம் வெள்ளை நுரையீரல் நோய்க்குறியை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் காரணிகளும் கூட இந்த மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் ஒரே குறிப்பிட்ட சிகிச்சையால் சரியாகிவிடும் என்று இல்லை. ஆன்ட்டி பயாடிக்ஸ், ஆன்டிவைரல்கள் அளித்து சிகிச்சை தருவார்கள். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜன் தர வேண்டும். நோய்ப் பாதிப்பு எவ்வளவு தீரிவம் ஏற்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications