ஓமன் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் இடது காதை கவனித்தீர்களா? தகதகனு மின்னுதே! என்னவா இருக்கும்?
டெல்லி: ஓமன் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் காதில் கடுக்கன் போல் ஏதோ ஒரு பொருள் மின்னியது குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றார். அப்போது ஓமன் துணைப் பிரதமர் செய்யித் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத், பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து உற்சாகமாக வரவேற்றார்.
அப்போது அந்த நாட்டின் நடனம், அணிவகுப்பு மரியாதை பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி விமான நிலையத்தில் ஓமன் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரது இடது காதில் ஒரு சிறிய வைரம் போல் மின்னியது.
இதை பார்த்த பலரும் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா என கேள்வி எழுப்பி வந்தனர். ஆடை அலங்காரத்தில் எப்போதும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த கடுக்கனும் புதிய டிரென்ட்டாக இருக்குமோ என நெட்டிசன்கள் கருதினர்.
அந்த புகைப்படத்தை எத்தனை முறை ஜூம் செய்து பார்த்தாலும் அது என்னவென தெரியவில்லை. அப்போதுதான் அது மொழிபெயர்ப்பு கருவி என தெரியவந்தது. அதாவது Real Time Translator கருவி ஆகும்.
ஓமனின் அதிகாரப்பூர்வ மொழி அரபு என்பதால் அதை அந்தநாட்டு தலைவர்கள் பேசும் போது உடனுக்குடன் இந்த கருவி பிரதமர் மோடிக்கு இந்தியில் மொழி பெயர்த்து கொடுத்துவிடுகிறது. இதனால் அரசு முறை பயணங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு மொழி புரியாமை காரணமாக இருந்து விடக் கூடாது என்பதற்காக அவர் இந்த கருவியை கொண்டு செல்கிறார்.
பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளும் அவருக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதை அளித்து கவுரவிக்கிறார்கள். அந்த வகையில் ஏற்கெனவே 28 நாடுகள் அவருக்கு தங்கள் நாட்டின் மிக உயரிய விருதை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தியா- ஓமன் உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்தநாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் ஓமன் என்ற விருதை ஓமன் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் வழங்கினார்.












Click it and Unblock the Notifications