"இந்தியா பொருளாதாரம் நல்லா இருக்கு.. ஆனால் ஒரு பிரச்சினை!" எச்சரிக்கும் ரகுராம் ராஜன்! என்ன சொன்னார்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கொரோனா என்பது அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகமாகவே இருந்தது. உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளும் கூட ரொம்பவே அதிகம்,

இந்த கொரோனா அனைத்து நாடுகளையும் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதித்தது. அதன் பாதிப்புகள் இப்போது வரை எதிரொலித்தே வருகிறது. உலகின் டாப் நாடுகள் கூட பொருளாதாரத்தில் தட்டுத் தடுமாறி வருகிறது.
ரகுராம் ராஜன்: இதற்கிடையே இந்தியப் பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுவதாகத் தெரிவித்த ரகுராம் ராஜன், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் போதிய வேலைவாய்ப்பை உருவாக்க நாம் 8% வேகத்தில் வளர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ரகுராம் ராஜன், "நமது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர 8% -8.5% நாம் வளர வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 6%-6.5% என்ற பொருளாதார வளர்ச்சி என்பது நமக்கு வலுவாக உள்ளது. ஆனால், நாம் அதிகபட்ச வேலையை உருவாக்க வேண்டி இருக்கிறது. நமது இளைஞர்களுக்கு வேலைகளை உருவாக்க நாம் வேகமாக வளர வேண்டும்" என்றார்.
வளர்ச்சி: இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்ற பெரிய நாடுகளைக் காட்டிலும் வேகமாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இளைஞர்கள் பலரும் கல்லூரிகளை முடிக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி தேவை என்கிறார். கடந்த அக். மாதம் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 10.05% ஆக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் இந்தளவுக்கு அதிகமாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இது குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில், "சீனா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் நாம் உற்பத்தித் துறையில் போட்டிப்போட நமது இளைஞர்களுக்கு நாம் பயிற்சி தர வேண்டும். நாம் பொருளாதார வளர்ச்சியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கான ஆரம்ப அறிகுறிகள் பாசிட்டிவாகவே இருக்கிறது. இந்தியாவில் ஐபோன் அசெம்பிளி செய்யப்படுகிறது. இது நல்லதுதான்.. ஆனால் நிஜமாகவே இந்தியாவில் செல்போன்களை நாம் முழுமையாகத் தயாரிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
இந்தியா: இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, நாம் இன்னும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு தான் வருகிறோம். இப்போது தான் நிலையான வளர்ச்சியை நாம் காண்கிறோம்.. உள்கட்டமைப்பில் அரசு செலவழிக்கும் தொகை உயர்வது, உயர் நடுத்தர வர்க்கத்தினரின் தேவை அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
சிப் தயாரிப்பில் சீனா இப்போது டாப் இடத்தில் இருக்கிறது. ஆனால், நாம் சிப் தயாரிப்பில் இன்னும் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அமெரிக்காவில் பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, இதையெல்லாம் கருத்தில் வைத்தே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications