ஒருவர் உயிரிழந்தால் அவரது ஆதார் என்னவாகும் தெரியுமா.. அடடே இதுல இவ்வளவு இருக்கா

இப்போது அரசின் பெரும்பாலான மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒருவர் மரணிக்கும் போது அவரது ஆதாரை என்ன ஆகும் என்று யோசித்து இருக்கிறீர்களா.. அவர்களின் ஆதார் என்னவாகும் இப்போது இதற்கு அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டம் ஆகியவற்றை பார்க்கலாம்.

இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2010ஆம் ஆண்டு செப். மாதம் முதலில் அறிமுகப்படுத்தினார்கள்.

அதன் பிறகு தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் என்பது தனிப்பட்ட அடையாள எண் என்பதால், அரசின் திட்டங்களை ஒரே நபர் பல முறை பயன்படுத்துவது குறைந்தது.

 ஆதார்

ஆதார்

மேலும், உதவி தேவைப்படுவோருக்கு சரியாக உதவி சென்று சேர்வதை உறுதி செய்யவும் இது பயன்படுத்தப்பட்டது. ஆதார்- பான் இணைப்பு, ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு என்று பல அறிவிப்புகளை கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் இப்போது எங்கும் ஆதார் என்ற நிலையே உருவாகியுள்ளது. ஆதார் இல்லாமல் எந்தவொரு அரசின் உதவி மற்றும் மாணியங்களை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மரணமடைந்தால்

மரணமடைந்தால்

சமீபத்தில் தமிழ்நாடு அரசும் கூட மாணிய மின்சாரத்தை பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று அறிவித்திருந்தது. இப்படி அனைத்திற்கும் ஆதார் என்று ஆகிவிட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தால் அந்த ஆதார் எண்ணுக்கு என்னவாகும் என்று யோசித்து உள்ளீர்களா.. வாங்க இது குறித்து விரிவாக பார்க்கலாம். ஒருவர் உயிரிழந்த உடன் அந்த ஆதார் எண் செயலிழந்ததாக ஆக்கப்படும்,.

 புதிய நடைமுறை

புதிய நடைமுறை

இந்த நடைமுறையை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடப்பதை உறுதி செய்ய ஆதரை வழங்கும் உதாய் அமைப்பு இப்போது இந்தியப் பதிவாளர் ஜெனரலுடன் கை கோர்த்துள்ளது. இறப்பு சான்றிதழ் வழங்குவதன் மூலம் அடையாளப்படுத்தி அந்த குறிப்பிட்ட ஆதார் எண்ணை டெஆக்டிவேட் செய்துவிடுவார்கள். இறந்த நபரின் ஆதாரை நீக்கு இந்த புதிய வழிமுறை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீஆக்டிவேட்

டீஆக்டிவேட்

இதன் மூலம் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் ஆதார் டீஆக்டிவேட் ஆவது உறுதி செய்யப்படும். அதன்படி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், இறந்த நபரின் குடும்பத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். அவர்களும் அதை உறுதி செய்தவுடன் ஆதார் செயலிழக்கப்படும். இது மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ​​ஆதாரை செயலிழக்க செய்ய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களிடம் இருந்து இறந்தவர்களின் ஆதார் எண்ணை பெறுவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை.

 ஆதார்

ஆதார்

முன்னதாக, இந்தியப் பதிவாளர் ஜெனரல், இறப்புச் சான்றிதழை வழங்கும்போது இறந்த நபரின் ஆதாரை டீஆக்டிவேட் செய்யும் முறைக்கு உதய் அமைப்பிடம் பரிந்துரைகளை கோரியிருந்தார். பிறப்புச் சான்றிதழை வழங்கும்போதே ஆதார் எண்களை ஒதுக்கும் திட்டத்தை உதய் அறிமுகப்படுத்தியது. இதை இப்போது 20 மாநிலங்கள் மட்டுமே செயல்படுத்துகிறது. வரும் காலங்களில் மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இலவசமாக அப்டேட்

இலவசமாக அப்டேட்

இது ஒரு புறம் இருக்க ஆதாரை இலவசமாக ஆன்லைனில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அப்டேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 14ஆம் தேதி வரை ஆதாரை இலவசமாகப் அப்டேட் செய்து கொள்ளலாம். இதுவரை இதற்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை ஆதாரை இலவசமாக அப்டேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. myAadhaar போர்ட்டலில் மட்டுமே இலவசம் அப்டேட் செய்ய முடியும். நேரடியாக ஆதார் உதவி மையங்களுக்கு சென்றால் அங்கு வழக்கம் போல 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+