ராஷ்மிகா மந்தனா வீடியோ.. ஒரிஜினல் வீடியோவில் இருந்த பெண் பரபர கருத்து.. என்ன சொன்னார் தெரியுமா
டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அந்த ஒர்ஜினல் வீடியோவில் இருந்த ஜாரா படேல் இது குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் இப்போது டாப் இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், புஷ்பா, வாரிசு என்று இவர் நடித்த அனைத்து படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாகும். இப்போதும் இவர் பல படங்களில் நடித்து டிரெண்டிங்கில் இருக்கிறார்.

இந்தச் சூழலில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ என்று கூறிய இணையத்தில் ஒரு வீடியோ டிரெண்டானது. கடந்த சில நாட்களாகவே இணையத்தில் இதுதான் மிகப் பெரிய பேசுபொருளாக இருந்தது.
ராஷ்மிகா மந்தனா: அந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டில் நுழைவது போல இருந்தது. கருப்பு நிற டிரஸில் ராஷ்மிகா மந்தனா லிப்டில் உள்ளே வருவது போல இருந்த அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இருப்பினும், அந்த வீடியோ உண்மையில்லை என்றும் யாரோ சிலர் டீப் ஃபேக் (Deepfake) முறையில் அதை உருவாக்கியதும் தெரிய வந்தது. டீப் ஃபேக் முறையில் பிரபலங்களைச் சித்தரித்து வீடியோ பரவுவது இது முதல்முறை இல்லை.
கடந்த காலங்களில் பல சமயம் பல்வேறு பிரபலங்கள் குறித்து இதுபோல போலி வீடியோ பரவி இருக்கிறது. இருப்பினும், ராஷ்மிகா மந்தனா விவகாரம் மிக பெரியளவில் சர்ச்சையானது. பலரும் இது குறித்து தங்கள் அச்சத்தைப் பகிர்ந்தனர். இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டும் என வலியுறுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பலரும் இது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிரபலங்கள் கருத்து: இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். டீப் ஃபேக் தொழில்நுட்பம் எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை அவர்கள் எச்சரித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் கூட தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார்,
தன்னை பற்றிய போலி வீடியோ இணையத்தில் பரவுவது குறித்து வேதனை கொள்வதாகத் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா, இன்று தொழில்நுட்பம் இந்தளவுக்கு ஆபத்தான முறையில் பயன்படுத்தப்படுவதைப் பார்த்தாலே அச்சமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ராஷ்மிகா, இதே சம்பவம் பள்ளி கல்லூரி படிக்கும் போது அதை எப்படிச் சமாளித்திருப்பேன் என்றே தெரியாது என்றும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஜாரா படேல்: ராஷ்மிகா வீடியோ என்று இணையத்தில் பரவிய அந்த அந்த வீடியோவில் இருப்பவர் ஜாரா படேல். பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண்ணான இவரைத் தான் டீப் பேக் முறையில் எடிட் செய்துள்ளனர். இந்த விவகாரம் ஜாரா படேலுக்கு கூட முதலில் தெரியாதாம். யாரோ விஷமிகள் இதைச் செய்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து அந்த வீடியோவில் இருக்கும் ஜாரா படேல் மவுனம் கலைத்து, முதல்முறையாக சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னர்: இது குறித்து ஜாரா படேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "யாரோ விஷமிகள் சிலர் எனது வீடியோவில் பிரபல பாலிவுட் நடிகையின் முகத்தைப் பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த டீப் ஃபேக் வீடியோவுக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இப்போது நடக்கும் இந்தச் சம்பவம் என்னை மிகவும் கலக்கமடையவே வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இருக்கும் பெண்கள் குறித்து அதிகம் பயப்பட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோமோ எனக் கவலைப்படுகிறேன்.
இணையதளங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்து வீடியோக்களும் உண்மை இல்லை. எனவே, எந்தவொரு வீடியோவை பகிரும் முன்பும், ஒரு நிமிடம் யோசித்து பேக்ட் செக் செய்து உண்மைதானா என உறுதி செய்த பிறகு அதைப் பகிருங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த ஜாரா படேல்: பிரிட்டனில் வசிக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் தான் இந்த ஜாரா படேல்.. இன்ஸ்டாகிராமில் அவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். மேலும், அவர் டேட்டா இன்ஜினியராக வேலை செய்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications