மத்திய பட்ஜெட்.. எந்தெந்த பொருட்கள் விலை உயர்கிறது.. எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது.. முழு விபரம்
டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பல்வேறு பொருட்களுக்கான விலை உயர்கிறது. அதேபோல் சில பொருட்களுக்கான விலை குறைகிறது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய தொடங்கினார். மதியம் 12.15 மணிக்கு பட்ஜெட் தாக்கலை முடித்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி விலையேறும் மற்றும் விலை குறையும் பொருட்களின் விபரங்கள் வருமாறு:
விலை குறையும் பொருட்கள்:
இந்த பட்ஜெட்டின்படி 37 க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய உள்ளது. அதேபோல் புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறைய உள்ளது.
இதுதவிர கோபால்ட் புராடெக்ட்டுகள், எல்இடி, ஜிங்க், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப், உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அதன் விலையும் குறைய உள்ளது. மேலும் 12 அரிய மினரல்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் குறைய உள்ளது.
லெதர், ஜாக்கெட், ஷு, பெல்ட், பர்ஸ் உள்ளிட்டவற்றின் பொருட்கள் குறைக்கப்பட உள்ளது.பதப்படுத்தப்பட்ட மீன் பேஸ்ட் (சுரிமி) மீதான ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களுக்கான open cells and other components-க்களான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை என்பது குறைய வாய்ப்புள்ளது.

விலை உயரும் பொருட்கள்:
interactive flat panel மீதான அடிப்படை சுங்க வரி என்பது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் வரி என்பது அதிகரிக்கப்பட உள்ளது. இது தொலைக்காட்சி மற்றும் செல்போன்களில் எதிரொலிக்கப்படலாம் என்பதால் அதன் விலை உயர வாய்ப்புள்ளது. கூடுதலாக, நிதியமைச்சர் தற்காலிக மதிப்பீட்டிற்கான கால வரம்பை இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்க முன்மொழிந்தார்.
மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில், மக்காத பிளாஸ்டிக்குகளுக்கான சுங்க வரியை 25 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது. குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான அடிப்படை சுங்க வரியும் 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தது. இதனால் அதன் விலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது,
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications