உலகமே வியக்கும் சந்திரயான்-3.. மறுநாளே சத்தமின்றி அடுத்த மிஷனுக்கு வேலையை தொடங்கிய இஸ்ரோ! அட சூப்பர்
டெல்லி: சந்திரயான்-3 சாட்டிலைட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய மறுநாளே, இஸ்ரோ அதன் அடுத்த பெரிய பணியான ஆதித்யா-எல் 1-ஐ தொடங்க ரெடியாக இருக்கிறது.
இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. குறிப்பாக யாருமே தரையிறங்காத நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 3 இப்போது தரையிறங்கியுள்ளது.

கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவு குறித்து தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளைச் செய்து வந்தது. இதற்கிடையே இப்போது நீண்ட காலத்திற்குப் பிறகு நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சந்திரயான்-3: அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா மீண்டும் நிலவுக்கு சாட்டிலைட்களை அனுப்பி வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 சாட்டிலைட் இறங்கிய நிலையில், அது நிலவில் பல இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அடுத்த 14 நாட்களுக்கு அது நிலவின் ஆய்வுகளை மேற்கொள்கிறது. சந்திரயான் 3 வெற்றி என்பது இஸ்ரோவுக்கு மிகப் பெரிய பூஸ்டை கொடுத்துள்ளது.
ஆனால், இஸ்ரோ இத்துடன் நின்று போகவில்லை. நேற்றைய தினம் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், மறுநாளே அதாவது இன்றே இஸ்ரோ அதன் அடுத்த பெரிய பணியான ஆதித்யா-எல் 1-ஐ குறித்த ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 மிஷன் அடுத்த மாதம் தனது பயணத்தைத் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் அறிவித்தார்.
அடுத்து என்ன: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சந்திரயான் 3 வெற்றி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிக பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதற்காக நான் தேசத்தில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தப் பணி உங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.. இப்போது சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில், ஆதித்யா-எல்1 மிஷன் அடுத்த இலக்காக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
ஆதித்யா-எல்1 சாட்டிலைட் என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் லட்சிய முயற்சியைப் பிரதிபலிக்கிறது. இஸ்ரோ இந்த பணிக்காக மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு தயாராகி வருகிறது, இதற்கிடையே இப்போது ஆதித்யா-எல்1 சாட்டிலைட்டை அனுப்ப இஸ்ரோ ரெடியாகி வருகிறது.

ஆதித்யா-எல் 1 சாட்டிலைட்: இது தொடர்பாக சோம்நாத் மேலும் கூறுகையில், "எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடைய 120 நாட்கள் ஆகும்.. இந்த பயணத்தில் ஆதித்யா-எல் 1 சாட்டிலைட் சூரியனை நெருக்கமாகக் கண்காணிக்கவும், அதன் செயல்பாட்டை ஆய்வு செய்யவும் பயன்படும்" என்று அவர் தெரிவித்தார்.
பூமியில் உயிர்களைப் பராமரிக்கும் முக்கிய நட்சத்திரமாகச் சூரியன் இருக்கிறது. அந்த சூரியன் குறித்து நமது புரிதலை மேம்படுத்தவும் இந்த ஆதித்யா அனுமதிக்கிறது. அனுமதிக்கிறது. சூரியன் குறித்து நாம் இதில் பல ஆய்வுகளை மேற்கொள்ள உதவுகிறது. சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், சூரியனின் வெளிப்புற கரோனா குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா உதவுகிறது.
ஏன் முக்கியம்: சூரியனில் இருந்து வெளிவரும் காந்தப்புலன்கள் பூமியில் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் மின் கட்டுமானத்தைப் பாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். எனவே, இந்த சூரியனில் இருந்து கிளம்பும் காந்தப்புலன்கள் குறித்து நாம் ஆய்வு செய்வது முக்கியமான ஒன்றாகவே இருக்கும்.
ஆதித்யா-எல்1க்கு பிறகு விண்வெளிக்கு ஆய்வாளர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்த உள்ளது. ககன்யான் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications