ஒரே மாசத்தில்.. 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் இந்தியாவில் முடக்கம்.. பரபர ரிப்போர்ட்
செப்டம்பர் மாதத்தில் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
டெல்லி: இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி இருந்தது.. இதைதொடர்ந்து, சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசும் ஆணையிட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த சட்டங்களை வாட்ஸ்அப் ஏற்றுக்கொள்ள முதலில் தயக்கம் காட்டியது.. இருந்தாலும் பிறகு ஏற்றுக்கொண்டது. அதன்படி, யூசர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய அரசுக்கு அவ்வப்போது கொடுத்து வருகிறது.

பாதுகாப்பு
மேலும், நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிடும், வாட்ஸ் ஆப் கணக்குகளை அந்நிறுவனம் சமீப காலமாக முடக்கி வருகிறது. அப்படி முடக்கப்படும் எண்ணிக்கையையும் புள்ளிவிவரங்களுடன் அறிக்கையாக அவ்வப்போது வெளியிட்டும் வரும்.. அந்த வகையில், 2 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

கணக்குகள்
அதில், "ஜுன் 16 முதல் ஜூலை 31-ம் தேதிவரை நம் நாட்டில் 30,27,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன... இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் அனைத்தும் +91 என்ற செல்போன் எண்ணில் தொடங்கும். அதிகாரபூர்வமற்ற பயன்பாடு காரணமாகவே 95 சதவீதக் கணக்குகள் முடக்கப்பட்டன.. ஜுன் 16 முதல் ஜூலை 31-ம் தேதி வரை 594 புகார்கள் வந்தன. இதில் கணக்குகளை முடக்கக் கோரியும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தக் கோரியும் பல புகார்கள் வந்தன.
Recommended Video

புகார்கள்
இந்த புகார்கள் வந்த காலத்திலேயே 74 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தது... இந்நிலையில், இன்னொரு அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 22 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விளக்கம்
விதிமுறைகளை மீறியது தொடர்பாக 22 லட்சத்து 9 ஆயிரம் வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் மட்டும் 560 புகார்கள் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், முடக்கப்பட்ட கணக்குகளில் 95 சதவிகிதம் போலியானது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கமும் தந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications