வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எப்போது இயக்கப்படும்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வாவ் சூப்பர்
டெல்லி: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் இந்தியன் ரயில்வே இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உள்ள வசதிகளை விவரித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த அதிநவீன வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எப்போது முதல் இயக்கப்படும் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது நாட்டில் ரயில்கள் மிக விரிவான கட்டமைப்பைக் கொண்டு இருக்கிறது. முக்கியமான நகரங்கள் அனைத்துமே ரயில் மூலம் இணைக்கப்பட்டே இருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் அதிநவீன ரயில்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

குறிப்பாக வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. நாடு முழுக்க இப்போது பல ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர்: அடுத்த கட்டமாக ரயில்வே துறை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது. வந்தே பாரத்தை போலவே இதுவும் முழுக்க முழுக்க ஏசி வசதியை கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது தான் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது முதல் இயங்கும் என்பது குறித்து அஸ்வினி வைஷணவ் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மொத்தமாக மாற்றும்: ஏற்கனவே உள்ள வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களுடன் வந்தே பாரத் மெட்ரோ, வந்தே பாரத் ஸ்லீப்பர் ஆகியவையும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிட்டார். இந்த நான்கு ரயில்களும் நமது நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்தும் என்றும் பயணிகளுக்கு மிக சிறப்பான ரயில் சேவையை இது வழங்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மக்கள் சொல்லும் கருத்துகளைக் கவனிப்போம். அந்த கருத்துகளைப் பெற்றுக் கொண்டு அடுத்துத் தயாரிக்கப்படும் ரயில்களில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.
முக்கிய தகவல்: வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சின் அம்சங்களை விவரித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "அமிர்த பாரத் ரயில்களில் இருப்பதைப் போலவே புதிய கப்லர்கள் வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இருக்கும். மக்கள் எளிதாக ரயிலில் ஏறி இறங்கும் வகையில் கதவின் அருகே உள்ள கைப்பிடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு நாங்கள் பார்த்து பார்த்து வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை வடிவமைத்துள்ளோம்.

எப்போது: இப்போது நமது ரயில்களில் மிடில் பெர்த்திற்கு சங்கிலிகளைப் பயன்படுத்துகிறோம். வந்தே பாரத் ஸ்லீப்பரில் சங்கிலிக்குப் பதில் புதிய அம்சத்தைப் பயன்படுத்துகிறோம். டாய்லெட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. டிரைவர் ரூம்கள் இப்போது கழிப்பறை உடன் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.. ஸ்லீப்பர் கோச்சின் சோதனை ஓட்டம் இன்று முதல் அடுத்த 1.5 மாதங்களுக்கு நடத்தப்படும். முதல் ரயில் சேவை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்படும். அதில் மாற்றுக்கருத்து இல்லை" என்றார்.
அதேநேரம் முதலில் எந்த ரூட்டில் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷணவ் எந்தவொரு கருத்தையும் பகிரவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications