ஸ்பெஷல் விருந்து! ராகுலுக்கு திருமணம் எப்போது? சட்டென கேட்ட பெண்! சோனியாவின் பதில பாருங்க! ஆஹா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டில் பெண் விவசாயி ஒருவர், ‛‛ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்'' என பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி முன்பு சட்டென கேள்வி கேட்டார். அதற்கு சிரித்தபடி சோனியா காந்தி சொன்ன பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு அதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ள நிலையில் ராகுல் காந்தியிடம் இருந்து எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

 When Rahul Gandhi get married? Sonia Gandhis response to a woman farmer in her home

இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அங்கு வழக்கு நிலுவையில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே 26 எதிர்க்கட்சிகள் சேர்ந்து ‛‛இந்தியா'' என்ற பெயரில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் பிரதமர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வேண்டாம் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதமர் பதவி மேல் கவனம் செலுத்தாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்பதை காங்கிரஸ் கட்சி சுட்டி காட்டி உள்ளது.

இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். சமீபத்தில் அவர் லாரியில் பயணம் செய்து டிரைவர், கிளீனர்களின் பிரச்சனைகளை கேட்டார். அதன்பிறகு ஹரியானாவில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடவு செய்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

இதற்கிடையே இந்த மாதம் துவக்கத்தில் டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு சாலை மார்க்கமாக ராகுல் காந்தி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரியானா மாநிலம் சோனிபேட் அருகே பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடி ராகுல் காந்தி நாற்று நடவு செய்தார். மேலும் விவசாயிகள் அவருக்கு உணவு வழங்கினர்.

இந்த வேளையில் பெண் விவசாயிகள், ‛‛டெல்லிக்கு அருகே வசித்து வந்தாலும் கூட நாங்கள் இன்னும் அங்கு வந்தது இல்லை'' என தெரிவித்தனர். இதை கேட்ட ராகுல் காந்தி எனது வீட்டுக்கு அனைவரும் வாருங்கள் என தெரிவித்து இருந்தார். அதன்படி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் வேனில் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து வீட்டில் பெண் விவசாயிகளுக்கு வகைவகையான உணவுகள் பரிமாறப்பட்டது. அதன்பிறகு பெண் விவசாயிகள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலின்போது பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம், ‛‛ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்?'' என கேட்டார்.

அதற்கு சோனியா காந்தி, ‛‛நீங்கள் ஒரு பெண்ணை கண்டுபிடித்து தாருங்கள்'' என பதிலளிக்கிறார். இதை கேட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைத்து பெண் விவசாயிகளும் சிரித்தனர். இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் அந்த ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி, ‛‛அம்மா, பிரியங்கா காந்தி ஆகியோருடன் சில சிறப்பு விருந்தினர்கள் உள்ளனர். இது நினைவில் வைக்க வேண்டிய நாள். சோனிபட்டின் விவசாய சகோதரிகள் டெல்லிக்கு வந்தனர். அவர்களுடன் உணவு சாப்பிட்ட பிறகு வேடிக்கையான நிகழ்வுகள் நடந்தன. நெய்யில் தயாரிக்கப்பட்ட இனிப்பு, லஸ்ஸி ஊறுகாய் உள்ளிட்டவற்றுடன் நிறைய அன்பு நிறைந்ததாக இது அமைந்தது. உண்மையில் இது விலைமதிப்பற்ற பரிசு'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+