8-வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி.. நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது மத்திய சம்பள கமிஷன் அமைப்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது மத்திய சம்பள கமிஷன் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதை உறுதி செய்தார். அந்த சம்பள கமிஷன் பரிந்துரைகள் மற்றும் அவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதை பொறுத்து, மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்று தெரிய வரும் என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மத்திய அரசு 8வது சம்பள ஆணையத்தை அறிவித்தது.இந்த குழு தான் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவது குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். ஊதியக் குழு அறிவிக்கப்பட்டதில் இருந்து, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இரண்டு குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் 8வது சம்பள ஆணைய குழு உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் அடுத்த மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய 7வது சம்பள ஆணையத்தின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைய உள்ளது. எனவே புதிய ஊதியக் குழுவை மத்திய அரசால் ஜனவரி 2026 முதல் செயல்படுத்த முடியுமா இல்லையா என்பது ஊழியர்களின் மனதில் உள்ள பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் கடந்த கால கட்டத்தில் நடந்தவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது, புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தப்படுவது மிகவும் சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
ஏனெனில் 6வது, ஏழாவது உள்ளிட்ட முந்தைய ஊதியக் குழுக்கள் தங்கள் அறிக்கைகளை இறுதி செய்ய வழக்கமாக ஒரு வருடத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டன. இந்த முறை, முந்தைய ஊதியக் குழுக்களுடன் ஒப்பிடும்போது, ஊதியக் குழுவின் அறிவிப்பு தாமதமானதால், பரிந்துரைகளை செயல்படுத்துவது 2026-27 நிதியாண்டில் மட்டுமே காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த கங்கனா ரனாவத் மற்றும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சஜ்தா அகமது ஆகிய இரண்டு லோக்சபா எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவதற்கான 8வது ஊதியக் குழு உருவாக்கம் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்.
8வது ஊதியக் குழு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதா என்பது அவர்களின் கேள்விகளில் ஒன்றாகும். ஊதியக் குழுவிற்கான பரிந்துரை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கங்கனா ரனாவத் மற்றும் சஜ்தா அகமது ஆகியோர் கேள்விகளை எழுப்பினார்கள்.
அவர்களின் கேள்விக்கு நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மற்றும் பரிந்துரை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி "சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.
இதனிடையே எம்பி ஒருவர், 8வது ஊதியக் குழு மட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தோராயமான எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்களின் தோராயமான எண்ணிக்கை முறையே 36.57 லட்சம் (01.03.2025 நிலவரப்படி) மற்றும் 33.91 லட்சம் (31.12.2024 நிலவரப்படி) என்று கூறினார்.
8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் நிதிச் சிக்கல் குறித்து, 8வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகளை உருவாக்கி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அவை அறியப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்நிலையில் 8வது ஊதியக் குழுவின் நிதிக் கொள்கைகள் மற்றும் அரசாங்க செலவினங்களில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளதா அல்லது ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஏதேனும் ஆலோசனை நடத்தியுள்ளதா என்றும் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.
இது குறித்து பதில் அளித்த மத்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் குறித்து குறிப்பு விதிமுறைகள் (ToR) குறித்த பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாக கூறியது. மேலும் 8வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் மற்றும் அவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதை பொறுத்து,மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியவரும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications