"உலகின் வலிமையான பாஸ்போர்ட்.." சிங்கப்பூர் முதலிடம்.. அமெரிக்கா டாப் 5ல் கூட இல்லை.. இந்தியா எங்கே?
டெல்லி: இந்தாண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ரேங்கிங்கில் உலகின் வலிமையான பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் இருக்கிறது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவரால் 195 நாடுகளுக்குச் சென்று வர அனுமதிக்கிறது. இதில் அமெரிக்கா டாப் 5இல் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இந்த ரேங்கில் 82ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வலிமையான பாஸ்போர்ட் குறித்த தகவல்களை வெளியிடும்.. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த ரேங்க் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாஸ்போர்ட் ரேங்கிங் பட்டியலில் இந்தியா 82ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் மொத்தம் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடிவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. செனகல் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளுடன் இந்தியா 82ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
பாஸ்போர்ட் ரேங்க்: இந்த ரேங்கிங்கில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகின் வலிமையான பாஸ்போர்ட் என்ற சிறப்பை பெற்றுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கும் ஒருவரால் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். கடந்தாண்டு சிங்கப்பூர் 192 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதித்து 2ஆவது இடத்தை பிடித்து இருந்த நிலையில், இந்தாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்தாண்டு முதல் இடத்தில் இருந்த ஜப்பான் இந்த முறை 2ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் விசா இருப்போரால் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். ஜப்பான் மட்டுமின்றி பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.
உலக நாடுகள்: 191 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் (191 நாடுகளுக்கு விசா இல்லாத பயணம்) 3ஆவது இடத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் நாடுகள் 190 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அளித்து நான்காவது இடத்தை பிடித்துள்ளன.
5ஆவது இடத்தை ஆஸ்திரேலியாவும் போர்ச்சுகலும் பிடித்துள்ள நிலையில், 6வது இடத்தை போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் பிடித்துள்ளன. இந்த நாடுகள் முறையே 189 மற்றும் 188 நாடுகளுக்கு விசா இல்லாத பயணங்களை அனுமதிக்கிறது. அடுத்து 7ஆவது இடத்தில் 187 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதித்து கனடா, செக்கியா, ஹங்கேரி, மால்டா நாடுகள் உள்ளன.
அமெரிக்கா எங்கே: இந்த லிஸ்டில் அமெரிக்கா டாப் இடங்களுக்குள் வரவில்லை.. 186 நாடுகளுடன் அமெரிக்கா 8ஆவது இடத்தில் தான் இருக்கிறது. எஸ்டோனியா, லிதுவேனியா, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் 9ஆவது இடத்தில் உள்ள நிலையில், ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் 10ஆவது இடத்தை பிடித்துள்ளன.
இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான இடங்கள் உட்பட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள குடிமக்கள் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட் 82 வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 100வது இடத்தில் உள்ளது, பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 33 நாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. 26 இடங்களுக்கு எளிதாக அணுகக்கூடிய ஆப்கானிஸ்தான் பட்டியலில் கீழே உள்ளது.
இந்தியா: இந்த லிஸ்டில் இந்தியா 82ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்களால், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவர முடியும். கடந்தாண்டு 84ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை இரண்டு இடங்கள் முன்னேறி 82ஆவது இடத்தை பிடித்துள்ளது.
நமது அண்டை நாடான இலங்கை 93ஆவது இடத்தை சவுத் சூடான் உடன் பகிர்ந்துள்ளன. இந்த பாஸ்போர்ட்களை வைத்திருப்போரால் 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவர முடியும். அதேபோல பாகிஸ்தான் 100ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருப்போரால் 33 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும். இதில் ஆப்கானிஸ்தான் (26 நாடுகள்) கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications