பைடனுக்கு ஐடிசி! ட்ரூடோவுக்கு லலித் விடுதி! அப்போ ரிஷி சுனக் எங்கே? ஜி20 மாநாடு.. குவியும் தலைவர்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில், உலக தலைவர்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அங்கு எந்த தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஜி20 மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. உலகிலேயே மிகவும் வலுவான அமைப்புகளில் ஒன்றாக இந்த ஜி20 மாநாடு இருக்கும் நிலையில், இந்தக் கூட்டம் நாளை நடக்கிறது.

உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்கள் சர்வதேச அளவில் புவிசார் அரசியல் இப்போது பிளவுபட்டே இருக்கிறது. இந்தச் சூழலில் டெல்லியில் நடக்கும் இந்த ஜி20 மாநாடு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உச்சி மாநாடு: ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் வழங்கப்படும்.. கடந்தாண்டு இந்தோனேசியாவுக்குத் தலைமை பொறுப்பு கிடைத்த நிலையில், இந்தாண்டு இந்தியா வசம் ஜி20 தலைமை பொறுப்பு வந்துள்ளது. இந்த மாநாடு நாளை நடக்கும் நிலையில், டெல்லியில் சர்வதேச தலைவர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் டெல்லியில் ஆளில்லா விமானங்கள் தொடங்கி உட்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல ரஷ்ய அதிபரும் இதில் பங்கேற்கவில்லை. அவர்களைத் தவிர மற்ற தலைவர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டிற்கு டெல்லிக்கு வரும் நிலையில், அவர்கள் எந்தெந்த நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஜோ பைடன்: இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்குள்ள ஐடிசி மவுரியாவில் தங்குகிறார். வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் ஜோ பைடன், இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த இரு தரப்பு சந்திப்பில் அவர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமரான பிறகு ரிஷி சுனக் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், டெல்லியில் உள்ள ஷாங்கிரி லா ஹோட்டலில் தங்குவார். பிரதமர் மோடியைப் பாராட்டியுள்ள ரிஷி சுனக், இந்தியா சரியான நேரத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
சீன குழு: அதிபர் ஜி ஜின்பிங் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில், அந்நாட்டின் பிரீமியர் லீ கியாங் தலைமையிலான குழு இதில் கலந்து கொள்கின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஜி20 உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமல் போவது இதுவே முதல்முறை. இந்த சீனா டெல்லி தாஜ் ஹோட்டலில் தங்க உள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா சென்ற நிலையில், அங்கிருந்து அவர் நேரடியாக டெல்லிக்கு வர உள்ளார். அவர் டெல்லியில் இருக்கும் லலித் ஹோட்டலில் தங்க உள்ளார்.
அந்தோணி அல்பானீஸ்: ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அப்படியே இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் அவர் செல்லவுள்ளார். ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வரும் அவர் அங்குள்ள இம்பீரியல் ஹோட்டலில் தங்குகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications