ஐஸ்வர்யா ராய் டூ நயன்தாரா வரை : எந்த நடிகையின் திருமண உடை ரொம்ப காஸ்ட்லி தெரியுமா? யப்பா!
டெல்லி: திருமணம் செய்து கொண்ட நடிகைகளில் யாருடைய திருமண உடை விலை உயர்ந்தது தெரியுமா?
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார் என்பார். அந்தளவுக்கு திருமணம் செய்வது என்பது அத்தனை சுலபம் அல்ல. நாம் ஒரு பட்ஜெட் போட்டால் அது எங்கேயோ கொண்டு போய்விட்டுவிடும். அது போல் திருமணங்களில் சில கலாட்டாக்களும் நடக்கும்.

இவற்றை எல்லாம் சமாளித்து திருமணம் செய்வது என்பது பெரும் சவால்தான். இந்தியாவை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் வ்வொரு மாதிரியான திருமண முறை இருக்கிறது. ஒரு சிலரது சிம்பிளாக இருக்கும். ஒரு சிலரது ஆடம்பரமாக இருக்கும்.
பணக்காரர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களில் மேலும் ஆடம்பரத்தை கூட்டுவர். அதிலும் சிலர் நகைகளை விட திருமண உடைகளுக்குத்தான் அதிக பணத்தை செலவழிப்பார்கள். அதிலும் சினிமா நடிகர், நடிகை வீட்டு திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தொழிலதிபர்களின் வீட்டு திருமண உடையில் தங்கம் வெள்ளி, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும். அந்த வகையில் இதுவரை திருமணம் செய்து கொண்ட நடிகைகளில் ஒவ்வொருவருடைய திருமண உடை குறித்தும் அதன் விலை குறித்தும் பார்ப்போம்.
முதலில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் திருமண விவரங்களை பார்க்கலாம். ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஆகியோர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதில் ஐஸ்வர்யாவின் திருமண உடையின் மதிப்பு மட்டும் ரூ 75 லட்சமாகும். நீதா லுல்லா என்ற உடை வடிவமைப்பாளர் உருவாக்கியிருந்தார். காஞ்சிபுரம் புடவையில் அழகிய தங்க பார்டர், தங்க நூல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அடுத்ததாக ஷில்பா ஷெட்டி, இவர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஷில்பா தனது திருமணத்தின் போது தருண் தஹிலியானி வடிவமைத்த சிகப்பு நிற புடவையை அணிந்திருந்தார். அதில் 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இந்த திருமண உடையை தயாரிக்க 50 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அனுஷ்கா ஷர்மா- இவர் 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணத்தில் அணிந்திருந்த லெஹங்காவின் விலை ரூ 30 லட்சமாகும். சில்வர் நிறத்தில் பீச் நிற பூக்கள் டிசைன் இருந்தது.
பிரபஞ்ச அழகி பிரியங்கா சோப்ராவின் திருமணம்- கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிகரும் பாடகருமான நிக் ஜோன்ஸும் திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இரு முறைகளில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் ரிசவ்ஷனின் போது அவர் சிவப்பு நிHற லெஹங்கா அணிந்திருந்தார். அதன் விலை ரூ 13 லட்சமாகும்.
தீபிகா படுகோன்- இவர் ரன்வீர் சிங்கை மணந்தார். இவர்கள் இத்தாலியில் லேக் கோம்பாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சிந்தி மற்றும் கொங்கனி முறைப்படி நடந்தது. தீபிகா படுகோன் அணிந்த லெஹங்காவின் விலை ரூ 13 லட்சம் என சொல்லப்படுகிறது.
அடுத்ததாக ஆலியா பட்- இவர் ரன்பீர் கபூரை மணந்தார். இவர்களுடைய திருமணத்தின்போது ஆலியா அணிந்திருந்த திருமண உடைதான் அனைவரையும் கவர்ந்தது. ஆலியா ஆர்கென்சா புடவை அணிந்திருந்தார். இதன் விலை ரூ 50 லட்சம் என்கிறார்கள்.
அனில் கபூரின் மகள் சோனம் கபூர் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். அதன் விலை ரூ 70 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கிறார்கள். அத்துடன் அவர் அணிந்திருந்த நகைகளும் ரசிகர்களின் கண்களை பறித்தன.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. ஜேட் மோனிகா வடிவமைத்த வெர்மில்லியன் சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். முழுக்க எம்ப்ராய்டரி செய்யப்பட்ட இந்த புடவை பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் அதன் விலை ரூ 25 லட்சமாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications