பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. லிஸ்டில் இடம்பெற்ற மற்ற இரு தமிழக நகரங்கள்! செம
டெல்லி: இந்தியாவின் சூப்பர் பணக்காரர்கள் எங்கே அதிகம் உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதில் சென்னை உட்பட 3 நகரங்கள் டாப் 20இல் வந்துள்ளது.
உலக நாடுகள் மத்தியில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற நாடுகள் பொருளாதார ரீதியாகத் திணறும் போதும் கூட இந்தியாவின் வளர்ச்சி மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது.

இதனால் பெரும் பணக்காரர்கள் எனப்படும் ரூ. 1,000 கோடி அல்லது அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஹுருன் இந்தியா என்ற அமைப்பு 2023 ஆண்டிற்கான சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சூப்பர் பணக்காரர்கள்: இதில் நகரம் வாரியாக எந்த நகரில் சூப்பர் பணக்காரர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறித்த தகவல்களையும் ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் டாப் 5 இடங்களில் வழக்கம் போல மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்கள் உள்ளது. இதில் பட்டியலில் திருப்பூரும் இடம்பெற்றுள்ளது யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்தான்.
இந்த லிஸ்டில் டாப் இடத்தில் மும்பை இருக்கிறது. நமது நாட்டின் பொருளாதார தலைநகராக அறியப்படும் மும்பையில் மட்டும் 328 பெரும் பணக்காரர்கள் உள்ளதாக ஹுருன் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பும் 1000 கோடி ரூபாயைத் தாண்டும். இது மும்பையின் நிதி வலிமைக்குச் சான்றாகும். வங்கி, முதலீடுகள், பங்குச் சந்தைகள் என நிதித்துறையின் உயிர் நாடியாக நீண்ட காலம் மும்பை இருந்து வருகிறது.
அடுத்தடுத்த இடங்கள்: இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் நமது நாட்டின் தலைநகரான புது டெல்லி வருகிறது. மொத்தம் 199 பெரும் பணக்காரர்களுடன் இந்த லிஸ்டில் டெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தலைநகர் டெல்லி அரசியல்வாதிகள், தொழிலதிபர்களால் நிறைந்துள்ள நிலையில், அது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி முதல் தொழில்நுட்பம் வரை பல துறைகளிலும் தொழிற்சாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூர் வருகிறது. இங்கே 100 பெரும் பணக்காரர்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நகரில் இருக்கும் தொழில்முனைவோருக்கு ஏற்ற சூழல், தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் இதற்குக் காரணமாகும். மேலும், பெங்களூரின் வானிலை, கலாச்சாரம் ஆகியவையும் பெரும் பணக்காரர்களைப் பெங்களூரை நோக்கி ஈர்க்கிறது.

இதில் நான்காவது இடத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நகரமும் வணிக மையமுமான ஹைதராபாத் வருகிறது. ஐதராபாத்தில் மொத்தம் 87 பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். முதலில் ஐடி துறையில் ஹைதராபாத் பெரியளவில் கால்பதிக்கவில்லை என்றாலும் அதன் பிறகு, ஐடி துறையில் ஹைதராபாத் அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. அங்கே ஐடி பூங்காக்கள் எண்ணிக்கை வேகமாக வளர்கிறது. கூகுள், இன்டெல் என முக்கிய நிறுவனங்களும் இங்கே தங்கள் அலுவலகங்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னைக்கு எந்த இடம்: இந்த லிஸ்டில் 67 பெரும் பணக்காரர்களுடன் சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆட்டோமொபைல், உற்பத்தி மற்றும் ஐடி துறைகளில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவை தொழிலதிபர்களைச் சென்னையை நோக்கி ஈர்க்கிறது.
இதற்கு அடுத்து குஜராத்தின் மிகப் பெரிய நகரான அகமதாபாத் 55 பணக்காரர்களுடன் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா (51 பணக்காரர்கள்) 7ஆவது இடத்தில் உள்ள நிலையில், புனே (39 பணக்காரர்கள்) 8ஆவது இடத்திலும், சூரத் (27 பணக்காரர்கள்) 9ஆவது இடத்திலும் உள்ளது. இந்த லிஸ்டில் 10ஆவது இடத்தில் தேசிய தலைநகருக்கு அருகிலேயே உள்ள குருகிராம் இருக்கிறது. அங்கே 18 சூப்பர் பணக்காரர்கள் உள்ளனர்.
தமிழக நகரங்கள்: சென்னையைத் தவிர இந்த லிஸ்டில் தமிழ்நாட்டில் இருந்து மேலும் இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இதில் 16 சூப்பர் பணக்காரர்கள் உடன் கோவை 12ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல 7 சூப்பர் பணக்காரர்களுடன் திருப்பூர் 19ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த லிஸ்டில் திருப்பூர் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications