உலகின் டாப் 10 வலிமையான நாணயங்கள் எவை! அமெரிக்க டாலருக்கு கடைசி இடம்.. அப்போ இந்திய ரூபாய் எங்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுவது கரன்சிக்கள் தான், ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு எப்படி இருக்கிறது என்பதை வைத்து அந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கூட நாம் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கும் கரன்சியில் எது வலிமையானது என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரு கரன்சி வலிமையாக இருந்தால் நாடு ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது என்பதற்கு அது ஒரு சான்றாகும். கரன்சி மதிப்பு உயரும் போது, ​​அதன் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சர்வதேச முதலீடுகள் அதிகரிக்கும்.

 Which are the world top 10 Strongest Currency and where Indian ranks in the list

கரன்சி: ஒரு வலுவான கரன்சி என்பது பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள ஒரு நாட்டிற்குத் தேவையான வலிமையைத் தருகிறது. இப்போது சர்வதேச வர்த்தகம் என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது எதோ ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்பு அனைத்து நாடுகளையும் பாதிக்கும். அதுபோன்ற நேரங்களில் கரன்சி வலிமையாக இருந்தால் நிலைமையை நாம் ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.

ஐநா சபை உலகெங்கிலும் உள்ள 180 கரன்சிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. பெரும்பாலான கரன்சிக்கள் அந்த நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில கரன்சிகள் பிரபலமானவை.. அவை சொந்த நாட்டை தாண்டி பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

முக்கியம்: குறிப்பிட்ட கரன்சியின் வலிமை என்பது சப்ளை மற்றும் டிமண்ட் விவகாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். வட்டி விகிதங்கள், பணவீக்கம் முதல் புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை என ஒரு கரன்சி வலிமையைப் பல விஷயங்கள் முடிவு செய்கிறது.. ஒரு வலுவான கரன்சி என்பது ஒரு நாட்டின் வாங்கும் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல்.. உலக அரங்கில் அதன் நம்பகத்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது. பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது வலிமையான கரன்சி கொண்ட நாட்டில் முதலீடு செய்யவே முதலீட்டாளர்கள் விரும்புவார்கள்.

வலிமையானது எது: இதற்கிடையே உலகின் வலிமையான 10 கரன்சிக்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் குவைத் தினார் முதல் இடத்தில் இருக்கிறது. ஒரு குவைத் தினார் என்பது 270.23 இந்திய ரூபாய்க்குச் சமமானது. மேலும், ஒரு தினார் $3.25 டாலருக்கு சமமானது. இதில் இரண்டாம் இடத்தில் பஹ்ரைன் தினார் இருக்கிறது. இதன் மதிப்பு $2.65 டாலர் அதாவது ₹ 220.4 ஆகும்.

இந்த லிஸ்டில் ஓமானி ரியால் (ஒரு ரியால் மதிப்பு ரூ. 215.84 மற்றும் $2.60) மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து ஜோர்டானிய தினார் (ரூ. 117.10 மற்றும் $1.141), ஜிப்ரால்டர் பவுண்ட் (ரூ. 105.52 மற்றும் $1.27), பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ. 105.54 மற்றும் $1.27), கேமன் தீவு டாலர் (ரூ. 99.76 மற்றும் $1.20), சுவிஸ் பிராங்க் (ரூ. 97.54 மற்றும் $1.17) மற்றும் யூரோ (ரூ. 90.80 மற்றும் $1.09) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

டாலர்: இந்த லிஸ்டில் அமெரிக்க டாலர் 10ஆவது இடத்தில் இருக்கிறது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ₹ 83.10 ஆக உள்ளது.. வலிமையான கரன்சி லிஸ்டில் 10ஆவது இடத்தில் இருந்தாலும் கூட உலகளவில் மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் நாணயம் மற்றும் முதன்மை சேமிப்பு நாணயமாக டாலர் இருக்கிறது.

இந்தியா எங்கே: மேலும், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட லிஸ்ட்படி ஒரு அமெரிக்க டாலருக்கு 82.9 என்ற மதிப்புடன் இந்தியா இதில் 15வது இடத்தில் உள்ளது. மேலும், குவைத் தினாரை பொறுத்தவரை 1960இல் அது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அப்போது முதலே உலகின் மிக மதிப்புமிக்க நாணயமாக தினார் இருக்கிறது. குவைத் நாணயத்தின் வெற்றிக்குக் காரணம் குவைத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மைதான், குறிப்பாக குவைத்தின் எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத முறை அதன் கரன்சியை வலிமையாக வைத்துள்ளது.

நிலையான நாணயம்: சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீனின் நாணயமான சுவிஸ் பிராங்க், உலகின் மிகவும் நிலையான நாணயமாகக் கருதப்படுவதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி 10ஆம் தேதி இருந்த மதிப்பை அடிப்படையாக வைத்து இந்த லிஸ்டை ரெடி செய்துள்ளனர். இந்த லிஸ்ட் எப்போதும் அப்படியே இருக்காது. இதன் மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+