பட்ஜெட் 2019: நடுத்தர வர்க்கத்தினர், சம்பளதாரர்களுக்கு மத்திய அரசு அளித்த சூப்பர் சலுகைகள் விவரம்
Recommended Video
டெல்லி: நடுத்தர வர்க்கத்தினருக்கு மோடி அரசின் 2.0 பட்ஜெட்டில் மகிழ்ச்சியான விஷயம் என்றால் 5லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கட்டத்தேவையில்லை என்பது மற்றும் வீட்டுக்கடனுக்கு 1.5 லட்சம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி மற்றும் ஒன்றரை லட்சம் வரை வரிச்சலுகை உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம். .
மத்திய பட்ஜெட் 2019 இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானது என்றால் வருமான வரி உச்ச வரம்பு தளர்வு, இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி தாக்கல் செய்யப்பட்ட போது வருமான வரி உச்ச வரம்பு ரூ.5லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி இல்லை
இதன்படி 5லட்சம் வரை வருமானம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

1.5 லட்சம் சலுகை
நடுத்தர வர்க்கத்தினர் இனி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்க கடன் வாங்கி வாங்கினால், கடன் மீதான வட்டியில், 1.5 லட்சம் வரை வருமான வரியில் தள்ளுபடி பெறலாம்.

சேமிப்பு திட்டங்கள்
அதேபோல் பாரம் 80 சியின் படி நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சேமிப்பு திட்டங்கள் மூலம் ஒன்றரை லட்சம் வரை வருமான வரிச்சலுக்கையும் பெற முடியும்.
இதேபோல் போஸ்ட் ஆபிசில் பணம் போட்டிருந்தாலோ, வங்கியில் பணம் போட்டிருந்தாலோ அதற்கான டிடிஎஸ் பிடித்ததில் 10 ஆயிரம் வரை வரிச்சலுகை பெற முடியும் என்று இருந்தது. இப்போது 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச்சலுகை
இதேபோல் வீட்டுக்கடன் வட்டியில் சுமார் 2லட்ம் வரை வருமான வரிச்சலுகை இனி கிடைக்கும். ரூ.45 லட்சம் மதிப்பு வரை உள்ள வீடுகள் வாங்க வங்கியில் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் கடன் வாங்கினால் அதில் 1.5 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் 15 வருடங்கள் கடன் பிரீமியம் இருந்தால் சுமார் 7 லட்சம் வரை வீட்டு கடன் தள்ளுபடியில் பயன்கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

2 கோடி மதிப்பு
இரண்டு வீடு வைத்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் 2வது வீடு காலியாக இருந்தாலும் வரி செலுத்த வேண்டியிருந்தது. இனி வரிசெலுத்த வேண்டியதில்லை. ஒருவர் ஒரு வீட்டை விற்று வரும் பணத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அப்படி அவர் வரி செலுத்த விரும்பவில்லை என்றால், அந்த பணத்தில் வேறு ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என தான் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விற்று கிடைக்கும் பணத்தில் இரண்டு வீடுகள் வரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் 2கோடிக்குள் அதன் மதிப்பு இருக்க வேண்டும்.

ஒரு லட்சம் வரை
ஒரு சுய உதவிக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்ககப்பட்டுள்ளது. இதன்படி பெண்கள் சுயஉதவிக்குழுவை ஆரம்பித்தால் முத்ரா திட்டத்தில் எளிதில் கடன் பெற முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications