பிராமணர்களின் ஓட்டு அதிகம்.. டெல்லியில் எந்த சமூகத்தினரின் ஓட்டு வெற்றியை நிர்ணயிக்கிறது? முழு விபரம்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எந்த ஜாதியினரின் ஓட்டு வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பது பற்றிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். அதன்படி டெல்லியில் பிராமணர்கள் உள்பட உயர்ஜாதி இந்துக்களின் ஓட்டுகள் என்பது 40 சதவீதமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். டெல்லியில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி உள்ளது.
இதில் நேரடி போட்டி என்றால் ஆம்ஆத்மி மற்றும் பாஜக இடையே தான் உள்ளது. ஒரு காலத்தில் டெல்லியை கோட்டையாக வைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. இதனால் இந்த முறை எப்படியாவது டெல்லியில் அக்கவுண்ட்டை திறக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் ஆம்ஆத்மியும், ஆம்ஆத்மியிடம் இருந்து ஆட்சியை பறிக்கும் குறிக்கோளுடன் பாஜகவும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் டெல்லியில் எந்த ஜாதியை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். ஒவ்வொரு கட்சிக்கும் எந்த ஜாதியினரின் சப்போர்ட் அதிகம் உள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். டெல்லியை பொறுத்தவரை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 1 கோடியே 55 லட்சத்து 24 ஆயிரத்து 858 ஆக உள்ளது. இதில் 83 லட்சத்து 49 ஆயிரத்து 645 பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 71 லட்சத்து 73 ஆயிரத்து 952 ஆக உள்ளது. இவர்கள் தவிர ஓட்டுரிமை பெற்ற 3ம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை என்பது 1,261 ஆக உள்ளது.
இதில் டெல்லியில் பூர்வாஞ்சல் என்ற பூர்வாஞ்சலிஸ் மக்களின் ஓட்டு தான் அதிகம் உள்ளது. பூர்வாஞ்சல் என்பவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி, பீகார் மற்றும் ஜார்கண்ட்டில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தவர்கள். டெல்லி வாக்காளர்களை எடுத்து கொண்டால் 25 முதல் 30 சதவீதம் வரை பூர்வாஞ்சல் பிரிவினர் உள்ளனர். இந்த பிரிவினர் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தனர். அதன்பிறகு 2014ம் ஆண்டு தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மிக்கு ஆதரவாக மாறினர்.
இந்த பூர்வாஞ்சல் மக்கள் ஆதர்ஷ் நகர், பட்லி, புராரி, குந்தலி, காரவால் நகர், கிராரி, லட்சுமி நகர், பாலம்,ரிதாலா, சங்கம் விஹார், உத்தம் நகர் உள்பட 25 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். இதனால் தற்போதும் பூர்வாஞ்சல் மக்களின் ஓட்டுகளை பெற 3 கட்சிகளும் முயன்று வருகின்றன. தங்களின் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தலைமையில் தனித்தனியாக குழு அமைத்து பூர்வாஞ்சல் மக்களின் ஓட்டுகளை பெற 3 கட்சிகளும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாபி மக்கள். பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் 35 சதவீதம் பேர் டெல்லியில் உள்ளனர். இவர்கள் பூர்வாஞ்சல் சமுதாயத்தை விட அதிகம் என்றாலும் கூட டெல்லியின் அனைத்து இடங்களிலும் பரவி வாழ்கின்றனர். பூர்வாஞ்சல் மக்களை போல் குறிப்பிட்ட இடத்தில் இவர்கள் வசிக்கவில்லை. இருப்பினும் கூட டெல்லி சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக பஞ்சாபி மக்கள் உள்ளனர். இந்த 20 தொகுதிகளில் பஞ்சாபி மக்கள் அதிகம் உள்ளனர்.
நிலப்பரப்பு அடிப்படையில் பூர்வாஞ்சல், பஞ்சாபி மக்களின் சதவீதத்தை நாம் பார்த்துவிட்டோம். இனி மத வாரியாகவும், ஜாதி வாரியாகவும் எந்தெந்த பிரிவினர் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். அதன்படி டெல்லி மக்கள்தொகையில் 12 முதல் 13 சதவீதம் வரை இஸ்லாமியர்கள் உள்ளனர். குறிப்பாக 5 தொகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். சாந்தினி சவுக்,மதியா மஹால், பள்ளிமாறன், ஒக்லா, சீலம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 40 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இந்த தொகுதிகள் உள்பட மொத்தம் 10 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் உள்ளனர்.
இதுதவிர டெல்லியை பொறுத்தவரை உயர்ஜாதி இந்துக்களின் ஓட்டு சதவீதம் 40 என்று உள்ளது. சிஎஸ்டிஎஸ் (Centre for Study of Developing Societes) நிலவரப்படி டெல்லியில் பிராமணர்களின் ஓட்டு என்பது 12 சதவீதமாக உள்ளது. இந்தியாவில்அதிகமாக உத்தரகாண்ட்டில் 20 சதவீதம், இமாச்சல பிரதேசத்தில் 14 சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். இந்த 2 மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக டெல்லி 3வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாபி காத்ரிஸ் மற்றும் ராஜ்புட் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தலா 7 சதவீதமாக உள்ளனர். ஜெயின் மற்றும் பனியா அல்லது வைசியா பிரிவினர் 6 சதவீத அளவுக்கும், மற்றவர்கள் 8 சதவீத அளவுக்கும் உள்ளனர்.
இவர்கள் தவிர தலித் மக்கள் 17 சதவீதம் பேர் உள்ளனர். இதில் தலித் மக்களின் ஓட்டு என்பது ஆம்ஆத்மி, காங்கிரஸ் பக்கம் தான் கிடைக்கிறது. பாஜகவுக்கு கிடைப்பது இல்லை. இந்த ஓட்டுகளையும் அறுவடை செய்ய பாஜக காய்நகர்த்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications