Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரே நாடு ஒரே தேர்தல்.." பாஜக vs காங்கிரஸ்.. எந்த கட்சிக்கு அதிக பலன்! ராம்நாத் கோவிந்த் பளிச்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ள நிலையில், இப்படி ஒரே தேர்தலை நடத்துவதால் யாருக்குப் பயன் என்பது குறித்து அக்குழுவின் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் சில முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

நமது நாட்டில் லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அவை ஒரே நேரத்தில் நடத்தப்படுவதில்லை. உதாரணத்திற்கு இப்போது ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து லோக்சபா தேர்தல் நடத்தப்படும்.

 Which party will be benefits from one nation one election explains Ram Nath Kovind

இப்படித் தேர்தல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதால் இதனால் பெருமளவு நிதி வீணாவதாகவும் இதற்கு பதிலாக நாடு முழுக்க இருக்கும் அனைத்து சட்டசபைகளுக்கும் லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை பாஜக முன்னிறுத்துகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: இதை ஒரே நாடு ஒரே தேர்தல் என அவர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். இது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. அந்தக் குழு "ஒரே நாடு ஒரே தேர்தல்" நடத்துவது குறித்து விவாதித்து வருகிறது. ஒரே நேரத்தில் இதுபோல நாடு முழுக்க தேர்தல் நடத்துவதை ஆதரித்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அது எந்தக் கட்சிக்குப் பலனளிக்கும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் கோவிந்த், "இது தொடர்பாக அனைத்து தேசிய கட்சிகளிடமும் ஆலோசனை கேட்டுள்ளோம். இப்போது அவர்களுக்கு வேறு நிலைப்பாடுகள் இருந்தாலும் கூட, நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கட்டத்தில் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை ஆதரித்தே இருக்கிறது.

ஆலோசனை: இது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக் குழுவை அமைத்த மத்திய அரசு அதன் தலைவராக என்னை நியமித்தது. இந்தக் குழு மக்களுடன் இணைந்து, ஒரே நாடு, ஒரே தேர்தலை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இது தொடர்பாக ஆலோசனை கேட்டுள்ளோம்.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒரு கட்டத்தில் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. இது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதால் அனைத்து கட்சிகளின் ஆதரவை நாங்கள் கேட்டுள்ளோம். இது தேசிய நலன் சார்ந்த விஷயம்.

யாருக்கு பலன்: இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்பட்டால் அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு நன்மை தரும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. இந்த முறை மீண்டும் வந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி பலனடையும். அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி மத்தியில் ஆட்சியில் இருப்போருக்குப் பலன் கிடைக்கும்.. அதில் பாரபட்சம் இல்லை.

அரசியல் கட்சிகளைத் தாண்டி, பொதுமக்கள் தான் இதன் மூலம் மிகவும் பயனடைவார்கள்.. இப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் அதன் மூலம் பெருந்தொகையைச் சேமிக்க முடியும். அந்த தொகையை நாட்டின் வளர்ச்சிக்கு நாம் பயன்படுத்தலாம்" என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+