எந்த 4 அணிகள் ப்ளே ஆப் செல்லும்! பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் செல்லும் ஐபிஎல் 2023.. என்ன நடக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் தொடர் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே அடுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு எந்த அணிகள் தகுதி பெறும் என்று முன்னாள் வீரர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்தே காத்திருக்கின்றனர்.

இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் இப்போது விறுவிறுப்பாகக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

 Which teams will qualify for IPL 2023 Playoffs Race

ஐபிஎல்: இப்போது குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் டாப் 4 இடங்களில் உள்ளன. இருப்பினும், பெங்களூர் அணியும் போட்டியில் இருக்கிறது. இது தவிர ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இப்படி முதல் 4 இடங்களைப் பிடிக்க 8 அணிகள் களத்தில் உள்ளன. தற்போதைய சூழலில் டெல்லி மற்றும் ஹைதராபாத் தவிர அனைத்து 8 அணிகளுக்கும் ப்ளேஆப் சுற்றுகள் வாய்ப்புகள் உள்ளன.

குஜராத் அணி மட்டுமே தற்போது நாக்-அவுட்டிற்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அடுத்து ப்ளே ஆப் சுற்றுகளுக்கு எந்த அணிகள் முன்னேறும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

என்ன ஆகும்: இது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டரில், "இப்போது 15 புள்ளிகள் பெற்றுள்ள அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறலாம்.. அதேநேரம் 16 புள்ளிகளைப் பெற்றுள்ள அணிகள் கூட ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கலாம். நம்பமுடியாத ஒரு சூழலில் இருக்கிறோம். சிஎஸ்கே மற்றும் லக்னோ இரண்டும் 17 புள்ளிகளை எட்டலாம். இதன் மூலம் அவர்கள் இடம் உறுதி செய்யப்படலாம்.

அதேநேரம் இரு அணிகளுமே 15 புள்ளிகளுடன் தொடரை முடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போதும், பஞ்சாப், பெங்களூர், மும்பை 16 புள்ளிகளை எட்டவில்லை என்றால் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் ப்ளே ஆப்பிற்கு வரலாம். சென்னை, லக்னோ இரண்டும் 17 புள்ளிகளை எட்டி.. மும்பை, பஞ்சாப், பெங்களூர் அணிகளும் 16ஐ எட்டினால்... சிறந்த NRR கொண்ட அணி தகுதி பெறும். இது ஒரு அற்புதமான சீசன் தான்" என்று பதிவிட்டுள்ளார்.

எந்த அணிகள்: பொதுவாக ஐபிஎல் தொடரில் 16 புள்ளிகள் என்பது தான் பாதுகாப்பான புள்ளியாகக் கருதப்படும். ஆனால், இந்தாண்டு போட்டி டைட்டாக இருப்பதால் 15 புள்ளிகளைக் கொண்ட அணிகள் தகுதிபெறும் வாய்ப்பு இருப்பதால், நிலைமை சுவாரஸ்யமாக உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் 15 புள்ளிகளை மட்டுமே பெற்றால் மற்ற முடிவுகளைப் பொறுத்து தகுதி அமையும்.

மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 16 புள்ளிகளை எட்ட முடியும்.. ஆனால் சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி கடைசி ஆட்டங்களில் வெற்றியுடன் 17 புள்ளிகளை எட்டினால் அவர்கள் ப்ளே ஆப்பிற்கு வர முடியாமல் போகலாம். அந்த சூழ்நிலையில், மற்ற அணிகளுக்கு நிகர ரன் ரேட் ஆட்டத்தில் வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+