திமுக எம்.பி முதல் எம்.ஜி.ஆர் கால அமைச்சர் வரை.. இன்று பாஜகவில் இணைந்தவர்கள் யார் யார்? முழு விவரம்!
டெல்லி: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள், திமுக முன்னாள் எம்.பி என 16 பேர் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களில் பலரும், 40 ஆண்டுகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர்கள்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து இன்று மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் கேபி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்கள் விவரம் வருமாறு:

1. கரூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வடிவேல் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1974, 1984)
2. கோயம்புத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 2011)
3. பொள்ளாச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ரத்தினம் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1980, 1984)
4. சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 2006, 2011)
5. அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.கந்தசாமி (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1980)
6. தேனி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ஜெயராமன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1977, 1980, 1984)
7.. வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக அமைச்சர் திருமதி. கோமதி சீனிவாசன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1980, 1984, 1996)
8. வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.வாசன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1977)
9. ஆண்டிமடம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தங்கராஜ் அவர்கள் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1991)
10. புவனகிரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 2001)
11. பாளையங்கோட்டை தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குருநாதன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1989)
12. காங்கேயம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி முருகேசன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 2001)
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் திரு @Rajeev_GoI, மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS, @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP,… pic.twitter.com/874jx985o7
— K.Annamalai (@annamalai_k) February 7, 2024
13. திட்டக்குடி தொகுதி முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழழகன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 2001)
14. காட்டுமன்னார் கோவில் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1991)
15. கொளத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஏ.ரோகிணி (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 2001)
16. சிதம்பரம் முன்னாள் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் குழந்தைவேலு (எம்.பியாக இருந்த காலகட்டம் 1980)
மேலும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த, சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இ.வெங்கடாசலம் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 2001) மற்றும் கன்னியாகுமரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் (எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டம் 1980) ஆகியோரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர். அவிநாசி முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமியும் பாஜகவில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லி செல்லவில்லை.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications