வெறும் 13 நாள்தான்.. இந்தியாவில் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர்கள் யார் யார்? முழு லிஸ்ட்
டெல்லி: நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். நேருவுக்கு அடுத்து நீண்டகாலம் பிரதமர் பதவி வகிக்கிறார் மோடி. இதில், நாட்டில் மிக குறைந்த காலம் பிரதமர் பொறுப்பில் யார் யார் இருந்துள்ளார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.
இந்தியாவில் குறைந்த காலம் பிரதமர் பொறுப்பில் இருந்தவர்கள் யார் என்பது பற்றியும் அவர்கள் பதவிக்காலம் குறித்தும் இங்கே விரிவாக பார்க்கலாம்.

குல்சாரிலால் நந்தா:
குல்சாரிலால் நந்தா வெறும் 13 நாட்கள் பிரதமராக இரண்டு முறை வகித்துள்ளார். இருமுறையும் இடைக்கால பிரதமர் பொறுப்பையே இவர் வகித்தார். 1964 இல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
வாஜ்பாயி:
கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.அப்போது இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ஷங்கர் தயாள் ஷர்மா, வாஜ்பாயை ஆட்சி அமைக்க வருமாறு அழைத்தார். இந்தியாவின் 10-வது பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத சூழல் இருந்ததால் வெறும் 16 நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சரண் சிங்:
1979 ஆம் ஆண்டு ஜூலை 28 தேதி சரண் சிங் பிரதமராக பதவியேற்றார். காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிபதாக உத்தரவாதம் கொடுத்தது. ஆனால், வெறும் 23 நாட்களில் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. 20 ஆகஸ்ட் 1979 ஆம் ஆண்டில் சரண் சிங் பிரதமர் பொறுபில் இருந்து விலகினார். எனினும், காபந்து பிரதமராக ஜனவரி 14 ஆம் தேதி 1980- வரை 170 நாட்கள் காபந்து பிரதமராக சரண் சிங் பதவி வகித்தார்.
* லால் பகதூர் சாஸ்திரி: 1 ஆண்டு 216 நட்கள்
* மொரோஜி தேசாய்: 2 ஆண்டுகள் 126 நாட்கள்
* விபிசிங்: 343 நாட்கள்
* தேவகவுடா: 324 நாட்கள்
* ஐகே குஜ்ரால்: 332 நாட்கள்.
-
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக்












Click it and Unblock the Notifications