மோடி தான் நம்பர் 1.. அமைச்சரவையில் டாப்-20 அமைச்சர்கள் இவர்கள் தான்! என்னென்ன துறைகள் தெரியுமா?
டெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சரவையில் டாப் 20 அமைச்சர்கள் யார்? அவர்களது இலகாக்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார். நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது.

குறிப்பாக பாஜக மூத்த தலைவர்களும் ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களோடு கட்சியின் தேசிய தலைவரான ஜே பி நட்டா உள்ளிட்ட 71 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நரேந்திர மோடி அமைச்சவையில் டாப்-20 துறைகளை கவனிக்கும் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. பிரதமர் நரேந்திர மோடி தனி, பொது விவகாரங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத துறைகளை கவனிக்கிறார்.
அதற்கடுத்து மத்திய பாதுகாப்புத் துறையை ராஜ்நாத் சிங்கும், உள்துறை மற்றும் கூட்டுறவு துறையை அமித் ஷாவும் கவனிக்கின்றனர். நிதின் கட்கரி சாலை போக்குவரத்து துறையும், ஜேபி நட்டா மருத்துவம் மற்றும் குடும்ப நலன், உரம் மற்றும் ரசாயன துறையை கவனிக்க இருக்கிறார்.
ஐந்தாம் இடத்தில் உள்ள சிவராஜ் சிங் சவுகான் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையையும் ஊரக வளர்ச்சித் துறையும் கவனிக்கிறார். ஆறாவது இடத்தில் நிர்மலா சீதாராமன் நிதி துறையை கவனிக்கிறார். அடுத்ததாக சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறையானது ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மனோகர்லால் கட்டார் மின்சாரம், மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எச்டி குமாரசாமி கனரக தொழில்துறை மற்றும் இரும்பு அமைச்சகத்தை கவனிக்கிறார். வணிகம் மற்றும் தொழில் துறையை பியூஸ் கோயலும், கல்வி துறையை தர்மேந்திர பிரதானம் கவனிக்கின்றனர்.
ஜித்தன் ராம் மஞ்சிக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ராஜிவ் ரஞ்சன் சிங்குக்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளத்துறை, கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஷர்பானந்த சோவானாலுக்கு துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வழித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதி மற்றும் மேம்பாட்டு துறைக்கு வீரேந்திர குமார் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விமான போக்குவரத்து துறை ராம் மோகன் நாயுடுப்புக்கும், நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை பிரகலாத் ஜோஷிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலத்துறை ஜுவல் ஓரம்கும், ஜவுளித்துறை கிரிராஜ் சிங்குக்கும், 20வது இடத்தில் இருக்கும் ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், செய்தி ஒளிபரப்பு துறை அஸ்வினி வைஷ்ணவுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications