"ரூ.1413 கோடி!" பணக்கார எம்எல்ஏ இவர்தான்! டாப் 10இல் உள்ளவர்கள் யார்? தமிழக எம்எல்ஏக்கள் நிலை என்ன
டெல்லி: இந்தியாவில் மொத்தம் இருக்கும் 4001 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்புகளை ஆய்வு செய்து, அதில் டாப் 10 பணக்கார எம்எல்ஏக்கள் மற்றும் டாப் 10 ஏழ்மையான எம்எல்ஏக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றால் கோடிகளில் புரள்வார்கள் என்ற பிம்பமே இருக்கிறது. அது ஓரளவுக்கு உண்மைதான் என்ற போதிலும் அனைத்து எம்எல்ஏக்களும் இப்படி பெரும் பணக்காரர்களாக இருப்பதில்லை.

தற்போது இந்தியாவின் டாப் 10 பணக்கார எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ள அதேநேரம், குறைந்த சொத்து மதிப்பு கொண்ட எம்எல்ஏக்களின் தகவல்களும் நம்மை வியக்க வைப்பதாக இருக்கிறது.
சொத்து மதிப்பு: அதன்படி அரசியல்வாதிகள் குறித்த பல்வேறு தகவல்களை Association of Democratic Reforms எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே நாட்டில் 28 மாநிலங்கள் , இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 4001 எம்எல்ஏக்களின் சொத்துகளை ஆய்வு செய்து ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் இருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ₹1,413 கோடி சொத்துடன் இந்தியாவில் பணக்கார எம்எல்ஏவாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இருக்கிறார். டிகே சிவக்குமார் கர்நாடக காங்கிரஸில் முக்கியமான முகமாக இருந்து வருகிறார். கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடந்த போது காங்கிரஸ் கட்சிக்காக மாநிலத்தில் மிக பெரியளவில் பிரசாரம் செய்திருந்தார். காங்கிரஸ் அங்குப் பெற்ற மிகப் பெரிய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாகும். இப்போது கர்நாடக மாநில துணை முதல்வராகவும் டிகே சிவக்குமார் இருக்கிறார்.
ஏழ்மையான எம்எல்ஏ: அதேபோல நாட்டிலேயே மிகவும் குறைந்த சொத்து மதிப்பைக் கொண்ட எம்எல்ஏவாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நிர்மல் குமார் என்பவர் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு வெறும் ₹1,700 மட்டுமே என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிக சொத்து இருக்கும் டாப் 10 எம்எல்ஏக்களில் 4 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகும். பாஜகவை சேர்ந்த 3 பேரும் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம். இதில் முதலிடத்தில் ₹1,413 கோடி சொத்து மதிப்புடன் டி.கே. சிவக்குமார் வருகிறார். இரண்டாவது இடத்தில் கௌரிபிதனூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வான சுயேச்சை எம்எல்ஏ புட்டஸ்வாமி கவுடா (₹1,267 கோடி) இருக்கிறார்.
பணக்கார எம்எல்ஏ: பிரியகிருஷ்ணா (காங்கிரஸ் )₹1,156 கோடி சொத்து, ஆந்திர முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்): ₹668 கோடி சொத்து, ஜெயந்திபாய் சோமாபாய் படேல் (பாஜக) ₹661 கோடி சொத்து ஆகியோர் 3 முதல் 5 இடங்களில் உள்ளனர். காங்கிரஸ் கர்நாடக அமைச்சர் சுரேஷ் 348 கோடி சொத்துடன் 6ஆவது இடத்தில் இருக்கிறார்.
இதில் ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ₹510 கோடி சொத்து மதிப்புடன் 7ஆவது இடத்தில் இருக்கிறார். பராக் ஷா (பாஜக) ₹500 கோடி, டி.எஸ். பாபா (காங்கிரஸ்) ₹500 கோடி, மங்கள்பிரபாத் லோதா (பாஜக): ₹441 கோடி ஆகியோர் டாப் 10 இடங்களில் உள்ளனர்.
அதேபோல குறைந்த சொத்து மதிப்பு கொண்ட எம்எல்ஏக்களில் நிர்மல் குமார் (பாஜக)- ரூ. 1700, மகரந்த முதுலி (சுயேச்சை) ரூ.15 ஆயிரம், நரிந்தர் பால் சிங் சவ்னா (ஆம் ஆத்மி) ரூ.18 ஆயிரம் ஆகியோர் டாப் மூன்று இடங்களில் உள்ளனர். ஏழ்மையான எம்எல்ஏக்களில் பாஜக மற்றும் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் டாப் 10இல் உள்ளனர். சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் ஏழ்மை எம்எல்ஏக்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தமிழக கட்சிகள்: இதில் பணக்கார பட்டியலிலும் எம்எல்ஏக்கள் சரி, ஏழ்மையான எம்எல்ஏக்கள் சரி தமிழகத்தில் இருக்கும் எந்தவொரு கட்சியின் எம்எல்ஏக்களும் இடம்பெறவில்லை.
மேலும், இந்தியாவில் உள்ள 44% எம்எல்ஏக்கள் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் ஏடிஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது 4,001 எம்எல்ஏக்களில் 1,777 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் டெல்லியில் அதிகபட்சமாக 53% எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications