புளூ டிக் வசதி யாருக்கெல்லாம் கொடுக்கலாம்.. எலான் மஸ்கிற்கு யோசனை சொன்ன நடிகை கங்கனா ரனாவத்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ட்விட்டரில் புளூ டிக் வசதிக்கு 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்த நிலையில், அவரது முடிவுக்கு நடிகை கங்கனா ரனாவத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதும் எலான் மஸ்க் செய்த முதல் நடவடிக்கையே அதன் சி இ ஓவாக இருந்த பராக் அகர்வாலை வீட்டுக்கு அனுப்பியதுதான்.

அதிரடி நடவடிக்கைகள்

அதிரடி நடவடிக்கைகள்

அதன் பிறகு பல மேல்மட்ட நிர்வாகிகளை பணியில் இருந்து எலான் மஸ்க் நீக்கினார். இதோடு ஆள்குறைப்பு நடவடிக்கை முடிந்து விடும் என்று பலரும் கருதிய நிலையில், ட்விட்டரில் நாளொன்று 4 மில்லியன் டாலர் இழப்பு நேரிடுவதாக கூறி 50 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளும் தொடங்கி ஊழியர்கள் பலருக்கும் மெயில் அனுப்பப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

8 டாலர் கட்டணம்

8 டாலர் கட்டணம்

அதேபோல், டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை உறுதி செய்யும் வகையில் அளிக்கப்பட்டு வரும் புளு டிக் வசதியை தொடர்ந்து பெற மாதம் தோறும் 8 டாலர் கட்டணமாக செலுத்த வெண்டும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ட்விட்டரிலும் எலான் மஸ்க்கை டேக் செய்து பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கங்கனா ரனாவத் வரவேற்பு

கங்கனா ரனாவத் வரவேற்பு

ஆனாலும் இதற்கெல்லாம் வளைந்து கொடுக்காத எலான் மஸ்க், திட்டுபவர்கள் திட்டிக்கொள்ளலாம் ஆனால் 8 டாலர் கட்டணம் என்ற முடிவில் மாற்றம் இருக்காது என்று விடாப்பிடியாய் தெரிவித்து விட்டார். இந்த நிலையில், புளு டிக் வசதியை பெற 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவிப்பை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக கங்கனா ரணாவத் கூறியதாவது:-

கட்டணம் வசூலிப்பதில் தவறு இல்லை

கட்டணம் வசூலிப்பதில் தவறு இல்லை

"ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் புளு டிக் வசதி கொடுத்து விடலாம். தற்போது இருக்கும் சிறந்த சமூக வலைத்தளமாக ட்விட்டர் இருந்து வருகிறது. கணக்கை பராமரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவது அதன் நேர்மையை கட்டியெழுப்பும் விதமாகவே அமையும். இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாக கிடைப்பது இல்லை. எனவே கட்டணம் வசூலிப்பதில் எந்த தவறும் கிடையாது" என்று பதிவிட்டு இருக்கிறார்.

ட்விட்டரில் இல்லாத கங்கனா

ட்விட்டரில் இல்லாத கங்கனா

கங்கனா ரணாவத் இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவிட்டு இருக்கிறார். இத்தனைக்கும் தற்போது கங்கனா ரணாவத்திற்கு ட்விட்டரில் அக்கவுண்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலின் போது கங்கனா ரணாவத் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து ட்விட்டர் விதிகளை மீறி பதிவிட்டதாக கங்கனா ரணாவத்தின் அக்கவுண்டை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் ட்விட்டர் முடக்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+