டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டை இடித்த "யோகி" அரசு! இஸ்லாமிய நாடுகளை திரும்பி பார்க்க வைத்த "அஃப்ரீன் ஃபாத்திமா"! யார் இவர்?

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் மூலம் அஃப்ரீன் ஃபாத்திமா வீடு இடிக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது. இவருக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா? ஆதித்யநாத் அரசு இவரை குறி வைத்தது ஏன்?

உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய போராட்டக்காரர்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். நபிகள் நாயகம் குறித்து அவர் தவறாக பேசியது விமர்சனங்களை சந்தித்தது.

போராட்டம்

போராட்டம்

இவரின் பேச்சுக்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை நுபுர் சர்மா கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் சில இடங்களில் கலவரத்தில் முடிந்தது, இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது உத்தர பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

இடிப்பு

இடிப்பு

இதில் 304 பேர் இதுவரை கைதாகி உள்ளனர். பிரயாக்ராஜில் மட்டும் 91 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் சஹரன்பூர் பகுதியில் இருக்கும் 2 இஸ்லாமியர்களின் வீடுகள் நேற்று இடிக்கப்பட்டன. போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முதல்நாள் மதியம் பிரக்யாராஜ் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக ஜாவித் முகமது என்பவரின் வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது.

 யார் இவர்?

யார் இவர்?

போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமான நபர் ஆவார் இவர். அங்கு வளர்ச்சி பணிகள் கட்சி என்ற அமைப்பை இவர் நடத்தி இவர்கிறார். இவருக்கு அஃப்ரீன் ஃபாத்திமா என்ற 22 வயது மகள் இருக்கிறார். இவர்களின் வீட்டைதான் யோகி அரசு அங்கு இடித்துள்ளது. போராட்டத்தை தூண்டிவிட்டார் என்று இவர் மீது அம்மாநில அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. அதோடு ஆக்கிரமிப்பு நிலத்தில் இவர் வீடு கட்டி உள்ளதாகவும் யோகி அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது. ஆனால் இவர் சொந்த நிலத்தில்தான் வீடு கட்டினேன் என்பதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருக்கிறார்.

விசாரணை

விசாரணை

அதோடு அஃப்ரீன் ஃபாத்திமா அவரின் அம்மா ஆகியோர் பிரயாக்ராஜ் போலீஸ் தனியாக அழைத்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று இவர்கள் வீட்டை இடிக்கும் போது, அதில் இருந்து வெளியேற மறுத்து இவர்கள் உள்ளே போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வீட்டில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியாக அஃப்ரீன் ஃபாத்திமா குடும்பம் பழிவாங்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன.

யார் இவர்?

யார் இவர்?


இந்திய அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பலர் அஃப்ரீன் ஃபாத்திமாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமியர் செயல்பாட்டாளர்களும் அஃப்ரீன் ஃபாத்திமாவை திரும்பி பார்த்துள்ளனர். அஃப்ரீன் ஃபாத்திமா தனது அப்பாவின் கட்சியில் மாணவர் பிரிவில் தேசிய செயலாளராக இருக்கிறார். இவர் ஜேஎன்யூவில் படித்தவர்.

எங்கே படித்தார்?

எங்கே படித்தார்?

அங்கு இடதுசாரி மாணவர் அணியின் கவுன்சிலராக இருந்தார். அதேபோல் அலிகார்க் இஸ்லாமிய கல்லூரியில் இவர் மாணவிகள் சங்க தலைவராக இருந்துள்ளார். சிஏஏவிற்கு எதிராகவும் சுல்லி டீல்ஸ் போன்ற செயலிகளுக்கு எதிராகவும் இவர் போராடி இருக்கிறார். இவர் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க 'Muslimah Allahabad' என்ற இயக்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு நாட்டு இஸ்லாமியர்கள், அமைப்புகள் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.

English summary
Who is Afreen Fathima? Why UP government is targeting her and her house? உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் மூலம் அஃப்ரீன் ஃபாத்திமா வீடு இடிக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X