‛‛அந்த 3 பேர்’’.. மோடிக்கு பின் பாஜகவில் பிரதமராக தகுதியானவர் யார்? இந்தியா டுடே சர்வே ரிசல்ட் இதோ
டெல்லி: நரேந்திர மோடிக்கு பிறகு பாஜகவில் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தலாம் என்ற கேள்வியின் அடிப்படையில் இந்தியா டுடே கருத்து கணிப்பு மேற்கொண்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் டாப் 3 லிஸ்ட்டில் 3 முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2014, 2019 ஆகிய 2 நாடாளுமன்ற தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த 2 முறையும் பாஜக சார்பில் பிரதமராக நரேந்திர மோடி தான் பொறுப்பு வகித்து வருகிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் பிரதமராக மோடி தான் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது. அதேவேளையில் பாஜகவின் வெற்றியை தடுக்கும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 27 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களின் மனநிலை என்ன? என்பது குறித்து இந்தியா டுடே செய்தி நிறுவனம் சார்பில் ‛Mood of the Nation 2024' என்ற பெயரில் சர்வே நடத்தி மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. நாடு முழுவதும் 2023 டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்த சர்வேயில் நரேந்திர மோடிக்கு பிறகு பாஜகவில் யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தலாம்? என்ற வகையில் கேள்வி எழுப்பபட்டது. பிரதமர் மோடிக்கு தற்போது 73 வயது ஆகிறது. பாஜகவை பொறுத்தமட்டில் 75 வயதுக்கு பிறகு தலைவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரதமர் மோடிக்கு இந்த விஷயத்தில் விலக்கு அளிக்கப்படலாம். ஆனாலும் கூட அடுத்து பாஜகவில் பிரதமராக இன்னொருவரை முன்னிறுத்த வேண்டியது அவசியம் என்பதால் தான் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதில் பிரதமர் மோடிக்கு பிறகு அமித்ஷா பிரதமர் பொறுப்புக்கு பொருத்தமானவர் என அதிகமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி அமித்ஷா என்று 29 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அமித்ஷா தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற முக்கிய காரணமே அமித்ஷாவின் தேர்தல் வியூகங்கள் தான். பாஜகவில் அரசியல் சாணக்கியர் என அமித்ஷா அழைக்கப்பட்டு வருகிறார்.
இதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவருக்கு 25 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்ரவராக்கப்பட்டார். தற்போது 2வது முறையாக உத்தர பிரதேச முதல்வராக உள்ளார். குற்றம் செய்வோரின் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ள உத்தரவிட்டது உள்ளிட்ட தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் உத்தர பிரதேச முதல்வரான பிறகு பாஜகவில் குறுகிய காலத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்துள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்காரி உள்ளார். நிதின் கட்காரி தான் பிரதமர் பொறுப்பு ஏற்றவர் என 16 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நாக்பூர் எம்பியாக உள்ள நிதின் கட்காரி பாஜகவின் மிகவும் மூத்த தலைவர்களில் ஒருவர். ஆர்எஸ்எஸ் பின்புலத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் மீது அனைத்து கட்சி தலைவர்களும் மரியாதை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications