Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஜி முதல்வர் மகன்.. கெஜ்ரிவாலை வீழ்த்த டெல்லியில் பாஜக இறக்கிய துருப்பு சீட்டு.. யார் இந்த பர்வேஷ்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக இன்று வேட்பாளரை அறிவித்தது. கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் முதல்வரின் மகன் பர்வேஷ் வர்மா நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லி முதல்வர் அதிஷி பொறுப்பு வகித்து வருகிறார். டெல்லி சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

delhi assembly election 2025 arvind kejriwal parvesh verma

இன்னும் சில நாட்களில் டெல்லி சட்டசபை தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்படலாம். அதன்படி அடுத்த மாதம் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 36 இடங்களில் வெற்றி பெற்ற வேண்டும்.

இந்நிலையில் தான் ஆளும் ஆம்ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இந்த கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. ஆம்ஆத்மி சார்பில் 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜக சார்பில் இன்று 29 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் நியூ டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக பர்வேஷ் வர்மா நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் சூழலில் அவரை தான் பாஜகவின் பர்வேஷ் வர்மா எதிர்க்கிறார். இந்நிலையில் தான் பர்வேஷ் வர்மா யார்? பின்னணி என்பது பற்றி பலரும் அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த பர்வேஷ் வர்மா யார் என்றால் டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவார். சாஹிப் சிங் வர்மா டெல்லி முதல்வராக 1996 முதல் 1998 வரை இருந்தார். பர்வேஷ் சர்மா பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவர் ஹிந்து ஜாட் குடும்பத்தை சேர்ந்தவர். 2009ல் மேற்கு டெல்லி லோக்சபா தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டினார். பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.

அதன்பிறகு மேற்கு டெல்லி லோக்சபா தொகுதி எம்பியாக 2 முறை இருந்தார். கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தற்போது பர்வேஷ் வர்மா நியூடெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்கி உள்ளார். பர்வேஷ் வர்மாவுக்கு டெல்லியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் கெஜ்ரிவாலை அவரால் வீழ்த்த முடியும் என்று பாஜக நம்பி களமிறக்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+