ரொம்ப சீரியஸ் மேட்டர் இது! ஒரு செகண்ட் அமித் ஷாவையே அதிர வைத்த கோகாய்.. யார் இந்த வடகிழக்கு எம்பி?
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பாஜகவிற்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் பேசியது கவனம் பெற்றுள்ளது. தேசிய அளவில் அவரின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து இன்று விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்., சார்பில் அசாம் மாநில எம்.பி., கெளரவ் கோகாய் மீண்டும் முன்மொழிந்து இன்று உரையை தொடங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்., எம்.பி., ராகுல்காந்தி தொடங்கி வைத்து பேசுவதாக இருந்தது. ஆனால் ராகுல் இன்று பேசவில்லை.
மாறாக காங்கிரஸ் எம்.பி.,க்கள் கௌரவ் கோகாய் தீபக் உரையை இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து பாஜக அமைச்சர் ஜோஷி எழுந்து கௌரவ் கோகாயை கடுமையாக கேள்வி எழுப்பினார்.
பாஜக அமைச்சர் ஜோஷி: எனக்கு தெரிந்தபடி, கோகோய்க்குப் பதிலாக ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் உரையை தொடங்கி வைத்து பேசுவார் என்று சபாநாயகர் அலுவலகத்திற்கு காலை 11.55 மணிக்கு கடிதம் வந்தது. ஆனால் ஏன் ராகுல் பேசவில்லை? ஐந்து நிமிட இடைவெளியில் என்ன நடந்தது சார்? என்ன பிரச்சனை சார்? ராகுல் காந்தி சொல்வதைக் கேட்க நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம் என்றார்.
கோகாய் பதிலடி: ராகுல் எழுதிய கடிதத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? , சபாநாயகர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் வெளியே விடடுட்டுமா? சபாநாயகர் அலுவலகத்திற்கு என்ன கோரிக்கைகள் பெறப்படுகின்றன என்பதையும் நாங்கள் வெளியே சொல்ல வேண்டுமா வேண்டுமா? சபாநாயகர் இந்த நாடாளுமன்றத்தின் பாதுகாவலர். உங்கள் அலுவலகத்தில் பிரதமர் பேசியதை எல்லாம் நாங்கள் வெளியிட வேண்டுமா? சொல்லுங்கள்.. வெளியே சொல்லட்டுமா? என்று கேட்டார்.
அமித் ஷா கோபம்: இதற்கு மிக கோபமாக பதில் அளித்த அமித் ஷா.. கோகாய் சொல்வது சீரியஸ் மேட்டர். அவர் என்ன இப்படி பேசுகிறார். முடிந்தால் பிரதமர் மோடி சபாநாயகருடன் என்ன பேசினார் என்பதை வெளியே விடுங்கள். மோடி பெயரை இப்படி கோகாய் பயன்படுத்த முடியாது. இப்படி ஆதாரமற்று பேச கூடாது, என்று கடும் கோபத்துடன் பதில் அளித்தார்.
கோகாய் பேச்சு: இதை தொடர்ந்து பேசிய கோகாய், ஒட்டுமொத்த அவையும் மணிப்பூர் பக்கம் உள்ளது என்பதை காட்ட வேண்டும். அதானி குறித்து பேசினால் பாஜகவினர் கூச்சலிடுகிறார்கள் என்றால் இது யாருக்கான அரசு. நான் பிரதமர், முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் பற்றி பேசும் போது யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
நான் அதானியைப் பற்றிப் பேசும்போது, பாஜக எம்பிக்கள் ஏன் கோபத்துடன் நின்றனர்?. பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காமல் மௌன விரதம் இருக்கிறார். பிரதமர் மோடி தன் மௌன விரதத்தை கலைக்க வேண்டும்.
பிரதமர் எங்கே.. பிரதமர் எங்கே? மணிப்பூர் மாநில பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நீதி வேண்டும். மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதாகவே அர்த்தம். மணிப்பூரில் இரட்டை என்ஜின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது.
மணிப்பூரில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் ஏன் இன்றுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை? மணிப்பூரைப் பற்றி பேசுவதற்கு கிட்டத்தட்ட 80 நாட்கள் அவர் எடுத்தது ஏன், அதுவும் அவர் வெறும் 30 வினாடிகள் மட்டும் அதில் பேசியது ஏன்? பிரதமர் மோடி ஏன் இன்னும் மணிப்பூர் முதல்வரை நீக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார் கோகாய்.
கோகாய் யார்? : கவுரவ் கோகோய்அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸின் உறுப்பினர் ஆவார். இவர் 2020 முதல் மக்களவையில் காங்கிரஸின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். அவர் மக்களவையில் கலியாபோர் தொகுதியில் இருந்து எம்பி ஆனார். அசாம் முன்னாள் முதல்வர் காங்கிரஸ் தருண் கோகோயின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications