நித்யானந்தாவிடம் ரூ 1000 கோடி தங்கக் கட்டிகள்? லூட்டி அடிக்க காத்திருக்கும் கும்பல்?.. கைலாசா மர்மம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நித்யானந்தாவிடம் ரூ 1000 கோடி மதிப்பிலான தங்கக கட்டிகள் இருப்பதாகவும் அதை கொள்ளையடிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நித்யானந்தா ஆண், பெண் வித்தியாசமின்றி உறவு கொள்வாராம். அந்த உறவு தங்கு தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக வயாகரா மாத்திரைகளை அவர் உட்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கோமாவுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 நித்யானந்தா

நித்யானந்தா

ஒவ்வொரு முறையும் நித்யானந்தாவின் இருப்பு குறித்து பேச்சு எழும்போதெல்லாம் பேஸ்புக் பக்கத்திலிருந்து "நான் சாகவில்லை" என்று அவ்வப்போது பதில் வரும். ஆனால் முன்பு போல நித்யானந்தா சத்சங்கத்தில் பங்கேற்பதில்லை. தனது உடலுக்கு ஒன்றுமில்லை என அவர் கூறினாலும் எதற்காக படுத்த படுக்கையாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

சமாதி நிலை

சமாதி நிலை

மேலும் சமாதி நிலையில் இருப்பதாகவே நித்யானந்தா தனது பதிவுகளில் கூறி வருகிறார். இதுவும் பலருக்கு சந்தேகத்தை கிளப்புகிறது. நித்யானந்தாவின் உடல்நிலை மோசமாகிவிட்டதால் அவர் இந்தியாவிலிருந்து தப்பி வரும் போது ரூ 1000 கோடி மதிப்பிலான ஆசிரம பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றியுள்ள நிலையில் அந்த தங்கம் யாருக்கு என்ற பஞ்சாயத்தும் நடைபெறுகிறதாம்.

ரஞ்சிதா

ரஞ்சிதா

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நித்யானந்தாவுக்கு அம்மா, சகோதரன் இருப்பதால் ஆசிரம சொத்துகளை யார் எடுத்துக் கொள்வது என்ற சிக்கல் கிளம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நித்யானந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கைலாசா மர்மம்

கைலாசா மர்மம்

கைலாசா என்ற தீவே மர்மங்கள் நிறைந்துள்ள நிலையில் நித்யானந்தாவின் உடல்நிலை குறித்தும் அவர் வைத்திருப்பதாக சொல்லப்படும் தங்கக் கட்டிகள் குறித்தும் மர்மங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு நித்யானந்தா லைவ் வீடியோவில் தோன்றினால் மட்டுமே என்ட் கார்டு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+