காலிலே ஆகாசம்.. ஏழை, நடுத்தர மக்கள் டார்கெட்! ‘ஷூ’ விற்று கோடீஸ்வரரான ஹரி கிருஷ்ணன் - யார் இது?
டெல்லி: கேம்பஸ் ஆக்டிவ் வியர் என்ற விலை குறைவான விளையாட்டு ஷூக்களை உற்பத்தி செய்து, இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து இருக்கிறார் டெல்லியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன். யார் இவர்? 1983 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொழில் கொரோனாவுக்கு பிறகு உச்சம்பெற்றது எப்படி? விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் வரிசையில் புதிதாக இணைந்து இருப்பவர் ஹரி கிருஷ்ணன். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில் இவரது சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்புபடி ரூ.9,000 கோடி சொத்துக்களுக்கு இவர் அதிபதி. டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் "கேம்பஸ் ஆக்டிவ் வியர்" என்ற விளையாட்டு ஷூக்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனர் இவர்.

நைக், ரீபோக், அடிடாஸ், பூமா என பல சர்வதேச விளையாட்டு காலணி நிறுவனங்களின் போட்டிகளை மீறி "கேம்பஸ் ஆக்டிவ் வியர்" நிறுவனத்தை லாபகரமாக நடத்தி தற்போது கோடீஸ்வரர்கள் வரிசையில் இவரும் இணைந்து உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1 கோடியே 93 லட்சம் ஜோடி ஷூக்களை விற்பனை செய்து 158 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருக்கிறார்.
இந்தியா முழுவதும் கேம்பஸ் ஆக்டிவ் வியர் நிறுவனத்துக்கு 5 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 66 வயதான ஹரி கிருஷ்ணன் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தை சேர்க்க முடிவு செய்ததை தொடர்ந்து 23 சதவீத பிரீமியத்துடன் கடந்த மே 2022 ஆம் ஆண்டு அவரது நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டன.
இப்படி நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஹரி கிருஷ்ணன் செல்வ செழிப்பான குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. முதல் தலைமுறை தொழிலதிபரான இவர், கடந்த 1983 ஆம் ஆண்டு தன்னுடைய தொழிலை தொடங்கி உள்ளார். 'ஆக்ஷன்' பெயரில் ஷூக்களை விற்பனை செய்து வந்த இவர், கடந்த 2005 ஆம் ஆண்டு ரூ.800 க்கும் குறைவான விலையில் தரமான விளையாட்டு ஷூக்களை உற்பத்தி செய்து விற்க தொடங்கினார்.

ரூ.800 க்கும் குறைந்த விலையில் விளையாட்டு ஷூவா என்று வியந்த வாடிக்கையாளர்கள் ஹரி கிருஷ்ணனின் கேம்பஸ் ஷூக்களை வாங்கி பயன்படுத்த தொடங்கினர். குறிப்பாக மிகவும் பின் தங்கிய பொருளாதார பின்னணி கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
காரணம் வேகமாக ஓடும் திறன் இருந்தாலும் ரூ.1000 க்கும் அதிகமான விலை கொடுத்து ஷூ வாங்க முடியாமல் தடகளத்தை கைவிட்டவர்கள் ஏராளம். இவர்களால் இந்த ஷூவை எளிதில் வாங்கி பயன்படுத்த முடிந்தது. ரூ.800 முதல் ரூ.3,500 க்கு உட்பட்ட விலையில் இந்தியாவில் விளையாட்டு ஷூக்கள் கிடைப்பது அரிதாக இருந்த நிலையில் அந்த மார்க்கெட்டை தன்வசப்படுத்தினார் ஹரி கிருஷ்ணன்.

இப்படி இந்தியாவில் பெரும்பான்மையாக வசிக்கும் ஏழை, பின் தங்கிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை ஈர்த்த ஹரி கிருஷ்ணனின் கேம்பஸ் ஷூ நிறுவனத்தின் வருவாய், கடந்த 2021 ஆம் ஆண்டு உச்சத்தை தொட்டது. ஒரே ஆண்டில் ஒரு கோடியே 30 லட்சம் ஷூக்களை விற்று 94 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டி உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக காலணி வியாபாரத்திலும் ஹரி கிருஷ்ணன் விரைவில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஹரி கிருஷ்ணனின் மகன் நிகில் தற்போது கேம்பஸ் ஷூ நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். அவரது மனைவி தலைமை விற்பனை அதிகாரியாக உள்ளார். ஒரு குடும்பமாக சேர்ந்து இந்த நிறுவனத்தை வளர்த்து எடுத்து உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications