"டீம் ஜார்ஜ்.." இந்திய தேர்தல் முடிவுகளை ரகசியமாக மாற்றிய இஸ்ரேலிய நிறுவனம்! என்ன நடந்தது! பகீர்
டீம் ஜார்ஜ் என்ற சர்வதேச ஹேக்கர் குழு குறித்துப் பரபர குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி: டீம் ஜார்ஜ் என்று அழைக்கப்படும் சர்வதேச குழு ஒன்று, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டுள்ளதாகப் பரபர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நவீன உலகில் தேர்தல் பிரசாரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ரொம்பவே முக்கியமானது. ஒபாமா தொடங்கி பிரதமர் மோடி வரை பலரும் இதுபோன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தங்கள் தேர்தல் பிரசாரம் சமயத்தில் பயன்படுத்தியிருந்தனர்.
டிஜிட்டல் வழி பிரசாரத்தால் நன்மைகள் எந்தளவுக்கு இருக்கிறதோ... அதே அளவுக்குத் தீமைகளும் உள்ளன. மிக எளிதாகப் போலியான செய்திகள் டிஜிட்டல் பிரசாரத்தின் வழியாகப் பரவும். அந்நிய நாட்டுச் சக்திகள் தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இஸ்ரேல் நிறுவனம்
கடந்த காலங்களிலும் பல சமயங்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2016இல் டிரம்ப் வென்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட வெளிநாட்டு நிறுவனங்கள் தகவல்களைத் திருடியதாகப் புகார்கள் இருந்தன. இதற்கிடையே அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இது தொடர்பாகச் சர்வதேச நிருபர்கள் கூட்டமைப்பு 8 மாதங்களாக ஆய்வு நடத்தி இஸ்ரேலை மையமாகக் கொண்ட இந்த அமைப்பைக் கண்டுபிடித்தனர். பொய்யான தகவல்களைப் பரப்பி இந்த நிறுவனம் பல்வேறு உலக நாடுகளின் தேர்தல்களில் தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

டீம் ஜார்ஜ்
பாரீஸை மையமாகக் கொண்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பான ஃபார்பிடன் ஸ்டோரிஸ் ஆதரவுடன் இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த அந்த நிறுவனம் ஹேக்கிங், தவறான தகவல்களைப் பரப்புவது மூலம் உலகெங்கும் 30 தேர்தல்களில் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டீம் ஜார்ஜ் என்று அந்த குழு அழைக்கப்படுகிறது. தி கார்டியன் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், அந்த குழு இந்தியத் தேர்தல்களில் தலையிட்டதா என்பது குறித்த விவரங்களை கார்டியன் வெளியிடவில்லை.. இருப்பினும், அவர்கள் வெளியிட்ட வீடியோவில், இந்தியாவிலும் இஸ்ரேல் கருவிகள் பயன்படுத்தப்பட்டதை போலக் காட்டுகிறார்கள்.

காங்கிரஸ் கேள்வி
இதற்கிடையே இந்த விவகாரத்தை இப்போது காங்கிரஸ் கட்சியும் கையில் எடுத்துள்ளது.. இந்தியத் தேர்தல்களில் இஸ்ரேலிய குழு தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அரசாங்கம் தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தத் தவறான தகவல்களையும் போலி செய்திகளையும் பரப்புவதில் இஸ்ரேயில நிறுவனமான 'டீம் ஜார்ஜ்ஜுக்கும்', பாஜகவின் ஐடி பிரிவும் ஒற்றுமை இருப்பதாகக் காங்கிரஸ் சாடியுள்ளது. மேலும், இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகச் சாடியுள்ளது.

மத்திய அரசு மவுனம் ஏன்
உலகெங்கிலும் இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட தேர்தல்களில் இந்த டீம் ஜார்ஜ் தலையிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் போலி சமூக வலைத்தள பிரச்சாரங்களை மேற்கொள்ள ஒரு சாப்ட்வேரை பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கூறுகையில், "இந்தியாவில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அரசு அதன் மவுனத்தைக் கலைத்து, நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க என்ன செய்துள்ளது என்பதைக் கூற வேண்டும். ஒரு சர்வதேச அமைப்பு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, இதற்குப் பதிலளிப்பது மத்திய அரசின் வேலை" என்று அவர் தெரிவித்தார்.

டீம் ஜார்ஜ் வேலை என்ன
இந்தியத் தேர்தல்களில் தலையிட்டு அவற்றை மாற்ற பாஜக வெளிநாட்டு ஹேக்கர்களை பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார். மேலும் டிஜிட்டல் மீடியாவில் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் நாட்டின் அரசியல் அமைப்பில் தலையிட பாஜக, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மற்றும் பெகாசஸைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் இருப்பதையும் கடந்து சென்றுவிட முடியாது என்றும் சாடினார். சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நடத்திய இந்த விசாரணையில், 'டீம் ஜார்ஜ்' ஒரு பிரிவு அதன் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட மீடியா சொல்யூஷன்ஸ் (AIMS) என்ற அதிநவீன மென்பொருள் தொகுப்பை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் சர்வதேச நாடுகளின் தேர்தல்களில் தலையிட்டுள்ளனர்.

யார் இந்த டீம் ஜார்ஜ்
'டீம் ஜார்ஜ்' என்ற அழைக்கப்படும் இந்த ரகசியக் குழு 50 வயதான தல் ஹனான் தலைமையில் இயங்குகிறது. இதில் பல ஹேக்கிங் நிபுணர்கள் உள்ளனர்.. இப்போது 'ஜார்ஜ்' என்று அழைக்கப்படும் தல் ஹனான், 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்துள்ளார். இப்போது இந்த குழுவை நடத்தி வரும் அவர், உலகின் பல நாட்டுத் தேர்தல்களில் தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நிறுவனம் இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை தரவில்லை.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications