பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்? லிஸ்ட்டில் உள்ள ‛டாப்' தலைகள்.. ஏப்ரல் 3வது வாரத்தில் அறிவிப்பு
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவர் ஏப்ரல் 3வது வாரத்தில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த பட்டியலில் எந்தெந்த தலைவர்கள் உள்ளனர்? என்பது பற்றி முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் அமித்ஷாவுக்கு பிறகு பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றார். பாஜகவை பொறுத்தவரை தலைவர் பதவி என்பது 3 ஆண்டுகளுக்கானது. அதன்பிறகு ஒருமுறை மட்டும் பதவி என்பது நீட்டிப்பு செய்யப்படும்.

ஜேபி நட்டாவின் முதல் 3 ஆண்டு கால பதவி முடிவடைந்த பிறகு அடுத்த 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடியும் தருவாயில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. இதனால் தேர்தலை மனதில் வைத்து அவரே மீண்டும் தேசிய தலைவராக தொடர அனுமதி வழங்கப்பட்டது. அதாவது அவரது பதவிக்காலம் 2வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த பதவி நீட்டிப்பு என்பது குறுகிய காலத்துக்கானது தான்.
இதனால் ஜேபி நட்டா விரைவில் தேசிய தலைவர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதோடு தற்போது குஜராத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா செயல்பட்டு வருகிறார்.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் ஜேபி நட்டா மத்திய அமைச்சராக மட்டுமே தொடர்வார். பாஜக தேசிய தலைவர் பதவிக்கு இன்னொருவர் நியமனம் செய்யப்படுவார் என்பது உறுதியானது. இந்நிலையில் தான் பாஜகவின் புதிய தலைவர் ஏப்ரல் 3வது வாரத்தில் தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 4ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிவடைந்த உடன் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
தற்போது பாஜகவில் மாநில வாரியாக அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடந்து வருகிறது. 13 மாநிலங்களில் இந்த தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது. சில மாநிலங்களில் மாநில தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் 19 மாநிலங்களில் இந்த தேர்தல் முடியவில்லை. அடுத்த வாரத்துடன் உத்தர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 19 மாநிலங்களில் இந்த தேர்தல் முடிவடைய உள்ளது. அதன்பிறகு பல மாநிலங்களில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்யப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த மாற்றத்தை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் தேர்வு என்பது தொடங்கும். தற்போதைய சூழலில் பாஜகவின் தேசிய தலைவர் பொறுப்புக்கு பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் என்பது முன்னிலையில் உள்ளது. அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் தேசிய தலைவராக தேர்வு செய்வதற்கு முன்பாக பாஜகவின் பொதுச்செயலாளர்களாக பதவி வகித்தனர். இதனால் இந்த முறையும் பாஜக பொதுச்செயலாளராக இருக்கும் ஒருவருக்கு தேசிய தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
அதன்படி பார்த்தால் பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு சுனில் பன்சால், வினோத் தாவ்டே, துஷ்யந்த் கவுதம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது இதில் சுனில் பன்சால் 2017 ல் உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது. அதன்பிறகு 2022ம் ஆண்டு முதல் பாஜகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வுருகிறார். ஒடிசா, தெலுங்கானா, மேற்கு வங்கம், தெலுங்கானா, உள்ளிட்ட பல இடங்களில் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவருக்கு வயது வெறும் 55 தான்.
அதேபோல் வினோத் தாவ்டேவை எடுத்து கொண்டால் அவருக்கு 61 வயது ஆகிறது. இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். பீகார் மாநில பொறுப்பாளராக உள்ளார். இவர்கள் தவிர பாஜக தேசிய தலைவர் பட்டியலில் பல மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி மத்திய அமைச்சர்களாக தர்மேந்திர பிரதான், நிர்மலா சீதாராமன், சிவ்ராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார் ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர முன்னாள் மத்திய அமைச்சர்களான அனுராக் தாகூர், ஸ்மிருதி இரானி, கிசான் ரெட்டி ஆகியோரின் பெயர்களும் உள்ளது. இதுதவிர ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜுயின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு












Click it and Unblock the Notifications