ஏழைகளின் "மயந்தி லாங்கர்".. ஜியோவில் ஐபிஎல் தமிழ் ஆங்கரிங் செய்யும் பெண் யார் தெரியுமா? ஆஹா அவங்களா?
டெல்லி: ஐபிஎல் 2023 தொடரில் ஜியோ சினிமாவில் போட்டிகளை தொகுத்து வழங்கும் பெண் ஒருவர் வைரலாகி வருகிறார். சமீனா அன்வர் என்ற அந்த பெண் தற்போது இணையத்தில் புதிய சென்சேஷனாக உருவெடுத்து உள்ளார். இவரை பற்றி நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர். இவரின் போட்டோவை பகிர்ந்து யாருங்க இது என்று கேட்க தொடங்கி உள்ளனர். அவர் யார் என்பதை இங்கே பார்க்கலாம்..
கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் மாயந்தி மிகவும் பிரபலமானவர். கிரிக்கெட் வீரர்களை போலவே இவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி ஆவார். ஸ்டார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மாய்ந்தி மிகவும் பிரபலமானவர் ஆவார்.

யார் இவர்?
இவரது அழகான உச்சரிப்புக்கும், அழகுக்கும் கிரிக்கெட் உலகில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். சில கிரிக்கெட் வீரர்களை விட இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னிக்கும் மாய்ந்திக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இது காதல் திருமணம் ஆகும். கடந்த சில காலமாக இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை.

சீசன்
சில சீசனுக்கு முன் இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் ஓய்வு எடுத்தார். அதன்பின் பெரியதாக நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை. தமிழில் நிகழ்ச்சிகளை பாவனாதான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இந்த முறை ஐபிஎல்லின் ஓடிடி உரிமையை ஜியோ சினிமா வாங்கி உள்ளது. இதனால் பாவனா ஓடிடியில் தொகுத்து வழங்குவது இல்லை. இதையடுத்தே தற்போது சமீனா அன்வர் என்ற பெண் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சி
சமீனா அன்வர் தற்போது இணையத்தில் தனது உச்சரிப்பு மற்றும் ஸ்டைலுக்காக வைரலாகி வருகிறார். நெட்டிசன்கள் பலர் இவரை ஏழைகளின் "மயந்தி லாங்கர்" என்று கூட அழைக்க தொடங்கிவிட்டனர். ஜியோ சினிமாவில் கிரிக்கெட் போட்டிகள் கடினமாக இருக்கிறது. அடிக்கடி நிகழ்ச்சிகள் பஃபர் ஆகி வருகிறது. தொடர்ந்து இதில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அதற்கு இடையில் சமீனாவை பார்ப்பதுதான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது என்று பலரும் கமெண்ட் செய்துள்ளனர். அதே சமயம் இவருக்கு இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் அறிவு இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

யார் இவர்?
சமீனா அன்வர் ஏற்கனவே பீபாம் கோப்பை தொடங்கி பெண்கள் ஐபிஎல் வரை பல்வேறு போட்டிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் பிரபலம். இன்ஸ்ட்டா கிராமில் https://www.instagram.com/sameena_anwar என்ற ஐடியில் இவர் இருக்கிறார். அங்கே இவருக்கு 101 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இவரின் குரல் நன்றாக இருக்கிறது. அவருக்கு ரசிகர் ஆகிவிட்டோம் என்று நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து உள்ளனர். 2018ல் இருந்து இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் மீது இருந்த ஆர்வம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு மீது இருந்த ஆர்வத்தால் அவர் இந்த துறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications