பூபேஷ் பாகேல் தான் ஒரே சாய்ஸ்! பாஜகவுக்கு கடும் பின்னடைவு! சத்தீஸ்கர் முதல்வர் வேட்பாளர்! புது சர்வே
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த புது சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை நவ. 7 மற்றும் நவ.17 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

அங்கே நக்சல் அமைப்புகளின் நடமாட்டம் இருப்பதாலேயே தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வரும் டிச. 3இல் அறிவிக்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, அது கடந்த 2000இல் தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை அது மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. அதன் பின்னரே தனி மாநிலமாக உதயமானது. தொடர்ந்து அங்கே பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த 2018 தேர்தலில் தான் காங்கிரஸ் அங்கே முதல்முறையாக ஆட்சியை அமைத்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், 2018 தேர்தலில் காங்கிரஸ் 68 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்து. சத்தீஸ்கரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தது. மறுபுறம் அப்போது ஆட்சியில் இருந்த பாஜகவால் 15 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இதற்கிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து ஏபிபி சி வோட்டர் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் தற்போதைய முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலுக்கு 45% ஆதரவு இருக்கிறது. அவரைத் தவிர வேறு யாருக்கும் 40%க்கு மேல் ஆதரவு இல்லை.
அடுத்து இரண்டாம் இடத்தில் பாஜகவின் ராமன் சிங் 26 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸின் டி.எஸ்.சிங்தேவ் 6 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், மற்றொரு பாஜக தலைவரான சரோஜ் பாண்டே 2 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை தற்போது வரை வெளியான சர்வேக்களில் பாஜக வெல்லவே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications