உண்மையில் யார் பெஸ்ட்? தோனி vs ரோஹித்.. வந்து விழுந்த கேள்வி.. நறுக்கென பதில் சொன்ன சாட்ஜிபிடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் இப்போது அட்டகாசமாக நடந்து வரும் நிலையில், சாட் ஜிபிடியிடம் இது குறித்து சில கேள்விகளைக் கேட்டோம். அதற்கு அது நறுக்கென சில பதில்களைச் சொல்லியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுக்க பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்போது வரை கிட்டதட்ட அனைத்து அணிகளும் பாதி லீக் போட்டிகளில் விளையாடிவிட்டது. இதில் சென்னை, ராஜஸ்தான், லக்னோ, மற்றும் குஜராத் அணிகள் டாப் 4 இடங்களில் உள்ளன.

Who is the best IPL captain of all time? Dhoni or Rohit Sharma ChatGPT answers

சாட் ஜிபிடி: இருப்பினும், பெங்களூர், பஞ்சாப் அணிகளும் இதில் கடும் போட்டியைக் கொடுத்தே வருகிறது. இதனிடையே இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஐபிஎல் போட்டிகளையும் சாட் ஜிபிடியையும் இணைத்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். சாட் ஜிபிடி குறித்து இப்போது யாருக்கும் தனியாக எந்தவொரு அறிமுகமும் தேவையில்லை. உலகெங்கும் சாட் ஜிபிடி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனிடையே இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சில கேள்விகளை சாட் ஜிபிடியிடம் கேட்டோம். அது என்ன பதில் சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

சாட் ஜிபிடி என்பது என்பதும் டேட்டா அல்லது தகவல் அடிப்படையிலேயே அனைத்தையும் பிராசஸ் செய்து அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த சாட் ஜிபிடியிடம் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த இரு அணிகள் மோதும் போட்டிகள் பரபரப்பைக் கிளப்புவதாக உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு சாட் ஜிபிடி, "ஐபிஎல் வரலாற்றில் பல பெரிய போட்டிகள் உள்ளன, ஆனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதும் போட்டிகள் தான் தனித்து நிற்கின்றன.

சிறந்த போட்டி: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஐந்து முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த இரு அணிகள் மட்டும் 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளன. இறுதிப் போட்டிகள் மட்டுமின்றி இந்த இரு அணிகளும் (மே 2021 வரை) 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 18 போட்டிகளிலும், சென்னை 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன என்று சாட் ஜிபிடி கூறியுள்ளது.

2021 செப். மாதம் நடந்த ஐபிஎல் மற்றும் கடந்தாண்டு ஐபிஎல் தரவுகள் சாட் ஜிபிடியிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டிகள் எப்போதுமே பரபரப்பைக் கிளப்புவதாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்து. அதை சாட் ஜிபிடியும் ஒப்புக் கொண்டுள்ளது.

Who is the best IPL captain of all time? Dhoni or Rohit Sharma ChatGPT answers

சிறந்த கேப்டன்: ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டோம். அதற்குச் சிறந்த கேப்டன் என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. ஐபிஎல் வரலாற்றில் பல வெற்றிகரமான மற்றும் பிரபலமான கேப்டன்கள் தங்கள் அணிகளை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று ஐபிஎல் பட்டங்கள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களுக்கு சிஎஸ்கே அணியை வழிநடத்திய தோனி, எல்லா காலத்திலும் சிறந்த ஐபிஎல் கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்து, ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். கவுதம் கம்பீர் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வழிநடத்திய ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரும் இதில் அடங்குவர். ஒட்டுமொத்தமாகச் சிறந்த கேப்டன் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்தாகும்.

யாரு பெஸ்ட்? தோனி அல்லது ரோஹித் ஷர்மா யார் சிறந்த ஐபிஎல் கேப்டன் என்ற கேள்விக்கும் அதில் பதிலளித்துள்ளது. தோனி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன்கள் தான். இருவரும் தங்கள் அணிகளை வெற்றிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்துள்ளனர். தோனி சிஎஸ்கே அணியை மூன்று ஐபிஎல் பட்டங்கள், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களுக்கு வழிநடத்தியுள்ளார். எப்போதும் சிறந்த ஐபிஎல் கேப்டன்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

அமைதி, புத்திசாலித்தனம், வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்தும் திறனுக்காக அவர் அறியப்படுகிறார். மறுபுறம் ரோஹித் ஷர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து ஐபிஎல் பட்டங்களுக்கு வழிநடத்தி வெற்றிகரமாக இருக்கிறார். ஆக்ரோஷமான கேப்டன்சி, ஸ்மார்ட் முடிவெடுக்கும் திறனுக்காக அவர் அறியப்படுகிறார்.

தோனி மற்றும் ரோகித் என இருவருமே தங்களின் தனித்துவமான தலைமைத்துவ பாணியைக் கொண்டுள்ளனர், மேலும் இருவரையும் ஒப்பிடுவது கடினம். இருப்பினும், தோனி ஐபிஎல் ஆரம்பத்திலிருந்தே அதன் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். மேலும் அவரது அனுபவமும் அவரை ஒரு தனித்துவமான ஐபிஎல் கேப்டனாக ஆக்குகிறது. அதேநேரம் ரோகித் மும்பையை 5 முறை சாம்பியன் ஆக்கியுள்ளார்.

சிறந்த வீரர்: சிறந்த ஐபிஎல் வீரர் யார் என்ற கேள்விக்குப் பல வருடங்களாகப் பல சிறந்த வீரர்கள் இருப்பதால் ஒருவரைக் குறிப்பிட்டுக் கூறுவது கடினம்.. இருப்பினும், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ரோஹித் சர்மா, எம்எஸ் தோனி, டேவிட் வார்னர், கிறிஸ் கெய்ல், லசித் மலிங்கா மற்றும் சுனில் நரைன் ஆகியோர் வெற்றிகரமாக இருந்துள்ளனர் என்று அது கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+